சினிமாவுக்குள் 2011! அர்த்தமுள்ள அனுபவங்களும்- அழகான வாழ்க்கையும்!!
Posted On Thursday, December 29, 2011 at at 9:38 AM by மருதமூரான்.அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ- ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே- லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ- ஒரு
காதல் உந்தன் மேலே...!
இந்த வரிகளை 'இணையம்' பற்றிய பத்திரிகைக்கான கட்டுரையொன்றின் ஆரம்ப வரிகளாக எழுதுமளவுக்கு 'சினிமாவும்- இசையும்- காதலும்' என்னுள் தாக்கம் செலுத்தியிருக்கிறது இந்த 2011ஆம் ஆண்டு முழுவதிலும்.
வாழ்க்கையின் வேகத்தைக் காட்டிலும், மன அமைதிக்கான போராட்டம் மிகப்பெரியதாகவே இருந்திருக்கிறது. இந்த மன அமைதியை புத்தகங்களும்- சில நல்ல (வலைப்)பதிவுகளும், நண்பர்களும் ஓரளவுக்கு தீர்த்து வைத்திருக்கின்றன(ர்). அதுபோக, மனதுக்கு நிறைவு தருகிற சந்திப்புக்களும்- பிரிவுகளும் கூட. சோகத்தையும் கொண்டாட்ட மனநிலையில் (போகப்போக) அணுக முடியும் என்பதை எனக்கு அதிகமாக உணர்த்தியது 2011 தான்!
நிறைய வருத்தங்கள். போராட்டங்கள். நம்பிக்கையீனங்கள். அதைத்தாண்டி நம்பிக்கைகள் என்று வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பார்த்தாகிவிட்டது. அனுபவத்தைப் போன்ற மிகப்பெரிய படிப்பினை இல்லை என்று சொல்லுவார்கள். அந்த விலை மதிக்க முடியாத 'அனுபவங்களை' எதிர்காலத்துக்கான படிக்கட்டுக்களுக்கு பயன்படுத்துமளவுக்கு அதிகம் தந்திருக்கிறது இந்த வருடம். ஆக, 2011க்கு நன்றிகளும் நல்லதொரு வழியனுப்பலும் முதலிலேயே.
2011 சினிமா!
சீனு ராமசாமயின் 'தென்மேற்கு பருவக்காற்று' 2010 டிசம்பர் 24ல் வெளியாகினாலும், டீவீடியில் பார்த்தது 2011 இன் ஆரம்பத்தில்தான். தேசிய விருது பெற்ற 'தென்மேற்குப் பருவக்காற்று' அளவுக்கு எந்தவொரு படமும் என்னுள் அவ்வளவு ஆக்கிரமிப்பைச் செலுத்தவில்லை. ஆனாலும், நிறையச் சினிமா- நிறைய சந்தோசங்கள்- அதைவிட எரிச்சல்கள்.
ரசித்த படங்கள்: அழகிய காதலையும்- பஸ் பயணங்களின் பயங்கர பக்கங்களையும் காட்டிய சரவணனின் 'எங்கேயும் எப்போதும்". கோவை சரளா என்கிற நடிகையை மீள அழைத்துவந்து சிறுவர்களை கலகலப்பூட்டி லோரன்ஸின் 'காஞ்சனா". தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவரின் வாழ்க்கையையும்- ரீஆர்பி ரேட்டிங் என்கிற வர்த்தக மாயையும் சரியாகச் சொல்லிய Morning glory. தென்னாபிரிக்காவின் வெள்ளை நிறவெறிக்கு எதிராக அந்த சமூகத்துக்குள்ளிருந்தே எதிர்த்து போராடி, விடுதலைக் கவிதைகளை எழுதி 33 வயதுக்குள்ளேயே மறைந்த பெண்கவி Ingrid Jonker வாழ்க்கையை பேசிய Black Butterflies: The Ingrid Jonker story.
எரிச்சலூட்டிய படங்கள்: பாலாவின் 'அவன் இவன்', கௌதம்மேனனின் 'நடுநிசி நாய்கள்', ஷாருக்கானின் 'ரா-1' (இவைகள் பற்றி அதிகம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.) இவற்றையும் தாண்டிய படங்கள் எல்லாம் இருக்கின்றன. அவைபற்றி நினைத்தாலே இப்பவே பீப்பி தொற்றிக்கொண்டுவிடும் என்பதற்காக விட்டுவிடுகிறேன்.
நிறையப் புத்தகங்கள்!
நான் தேடிக்கொண்டிருந்த 1800களில் ரஸ்யாவில் வாழ்ந்த எழுத்தாளரான அலக்ஷாண்டர் புஷ்கினின் தேர்ந்தெடுக்கப்பட்ட 'சிறுகதைகளையும்- குறுநாலவையும்' உள்ளடக்கிய தமிழ்பதிப்பு புத்தகம். (இதனையும்- இன்னும் சில புத்தகங்களையும் பரிசளித்தார் நண்பர் ரமணன் சந்திரசேகரமூர்த்தி)
சரித்திர புனைவுகளில் ஈர்ப்பற்றிருந்த எனக்கு அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' பிடித்திருந்தது. (பார்க்கலாம், பொன்னியின் செல்வனும் வாசிக்க வேண்டும்.) கல்யாணம் என்கிற விடயத்துக்குப் பின்னாலுள்ள சமுதாய சிக்கல்- பிணக்கு தொடர்பில் பேசிய பெருமாள் முருகனின் 'கங்கணம்' நாவல். இன்னும் நிறையப் புத்தகங்கள். அதிகம் வாசித்த வருடங்களில் 2011ம் ஒன்று.
அழகான காதல்!
விலகியோடும் குழந்தையை சுற்றியிருக்கும் தாயின் அக்கறை மாதிரி, 'காதல்' மீதான அக்கறையும் அது இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் தான் அதிகரிக்கிறது!!
இப்படி பேஸ்புக் ஸ்ரேற்றஸ்களில் அவ்வப்போது காதல் பற்றி எழுதியே என்னைச்சுற்றி பலருக்கு தேவையற்ற எண்ணங்களை தோற்றுவித்துவிட்டேன். 'உண்மைக்கும்- உண்மை மாதிரி' இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என்று சொன்னாலும் நம்புகிறார்கள் இல்லை. ஆகவே அதனை விட்டுவிடுவோம். அண்மையில் ரசித்த காதல் காட்சி 'மயக்கம் என்ன'வின் இறுதியில் ரிச்சாவிடம், தனுஷ் போனில் சொல்லும் ஹலோ...!.
அரசியல் எல்லாமே அரசியல்!
உள்ளூர் 'ஊராட்சி' மன்றங்களிலிருந்து கடாபியின் கொலை வரை பல அரசியல் மாற்றங்களை கடந்து வந்திருக்கிறது 2011. என்னை அதிகம் பாதித்தது உயிருக்காக இரந்து கெஞ்சும் கடாபியின் கொலை. அவரின் ஆட்சியின் மீது எனக்கும் விமர்சனங்கள் இருந்தது. ஆனால், அவரை இப்படி இழிவான முறையில் கொன்றதை சசிக்க முடியவில்லை. ஆயுதங்கள் என்றைக்கும் அமைதியைத் தருவதில்லை என்பது உண்மைதான். அதுக்கு எல்லா உயிர்களும் ஒன்றுதானே!
அடுத்தது, பாகிஸ்தான் மீண்டும் இராணுவ ஆட்சிக்குள் செல்லும் நிலைமைகள் இருந்தது. பாகிஸ்தான் இராணுவத்தளபதி கஜானி, முன்னாள் இராணுவ ஆட்சியாளர் முஷாரப்பை விட அதிகாரமும்- தீரமும் மிக்கவர். 2012 பாகிஸ்தானிய மக்களுக்கு இராணுவ ஆட்சியை வழங்கலாம். பாகிஸ்தானியர்களுக்கும் அது பழக்கமாகிவிட்டது. இலங்கை- இந்திய அரசியல்கள் நிறைய இருக்கு. அவைபற்றி அவ்வப்போது பதிவுகளில் பேசியிருக்கிறேன். ஆகவே, இங்கு வேண்டாம்.
வலைப்பதிவுகளில் அதிக நேரம்!
2007இல் பதிவுகளை எழுத ஆரம்பித்ததன் பின்னர் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தின் நடுப்பகுதியில் அதிகமான பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவ்வப்போது என்னையும் 'அறச்சீற்றம்' பற்றிக்கொண்டிருக்கிறது. பதிவுகளை மீள வாசிக்கிற போது தெரிகிறது. நிறைய வாசகர்களையும் எனக்குப் பெற்றுத்தந்தது 2011.
பதிவர்கள் நண்பர்கள் செங்கோவி, ஜீ ஆகியோரின் எழுத்துக்கள் இந்த வருடத்தில் அதிகம் ரசிக்க வைத்தது. இணையத்தில் அதிகம் விமர்சனத்துக்கும்- தர்க்கத்துக்கும் உள்ளான சிறுகதை சோபாஷக்தியின் 'கப்டன்' என்று நினைக்கிறேன். நானும் என்னுடைய அனுபவங்களை எழுதியிருக்கிறேன்.
'வலையோடு விளையாடுவோம்' என்ற தலைப்பில் இலங்கையின் 'தினக்குரல்' பத்திரிகையில் புதிய இணைய பாவனையாளர்கள்- பதிவர்களுக்கான தொடரொன்றை எழுத ஆரம்பித்தேன். ஓரளவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அதுவும், மனதுக்கு மகிழ்ச்சியே. எதிர்வரும் வருடமும் தொடரும்! அந்த தொடரின் உருவாக்கம் எனக்கும் நிறையக் கற்றுத்தருகிறது. நிறைய தேடல்களுடன்.
இன்னும் இன்னும் 2011 என்னுள் அதிகம் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அவை தொடர்பில் இன்னும் பேசினால் சுயபுராணத்தின் உச்சமாக மாறலாம். ஆகவே, இவ்வளவுக்குள் நிறுத்திக்கொள்கிறேன். மலரும் 2012 அனைவருக்கும் நிம்மதியை வழங்கட்டும். சமாதானத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து களைத்துவிட்டதால் 'சமாதானம்' பற்றிய நம்பிக்கை இல்லாமலேயே போய்விட்டது. என்னை வாசித்த உறவுகளுக்கு நன்றிகளும்- வணக்கங்களும்...! புதிய வருடத்தில் சந்திக்கலாம்!!

ஒஸ்தியில் தொற்றிக்கொள்ளாத ஈழம்! பற்றிக்கொள்ளும் அறச்சீற்றம்!!
Posted On Wednesday, December 14, 2011 at at 9:51 AM by மருதமூரான்.விட்ட குறை தொட்ட குறையாக தமிழனுக்கு இப்போதும் 'அறச்சீற்றம்' இருக்கிறது என்பது மனதுக்கு மகிழ்ச்சி. ஏனெனில், தமிழனின் அறச்சீற்றத்துக்கு சடுதியான பக்க மாற்றங்களும்- ஏவல் தாவல்களும் எப்போதும் உண்டு. அது அவனுடன் பிறந்தது என்று நினைக்கிறேன். அந்தக் கூட்டத்துக்குள்ளேயே நானும் இருக்கிறேன்.
தமிழகச் சினிமா தன்னுடைய 'ஓவர்சீஸ் மார்க்கட்டை' அதுதான், வெளிநாட்டு சந்தையை ஈழத்திலிருந்து புலம்பெயர் தமிழர்களிடமேயே கொண்டிருக்கிறது. ஏனெனில், தமிழ்ச்சினிமா வர்த்தகத்தை குறிப்பிட்டளவு புலம்பெயர்ந்தவர்களின் டொலர்களும்- யூரோக்களும்- பவுண்களும் தூக்கி நிறுத்துகின்றன. அப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய நுகர்வோரை நோக்கியே தயாரிப்பாளர்களும்- உற்பத்தியாளர்களும் படைப்புக்களை உருவாக்குவார்கள். இல்லாவிட்டால், குறைந்தளவாவது அவர்களை குஷிப்படுத்தும் வேலைகளை தங்களின் படைப்புக்களினூடு செய்வார்கள். அதன்மூலம் தங்களின் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். இது வியாபார அடிப்படைகளின் ஒன்று. இதுதான், தமிழக சினிமாவிலும் 'ஈழம்' பற்றிய காட்சிகள்- வசனங்கள்- பாடல்கள் என்பவற்றினூடும் அதிகம் (முற்றுமுழுதாக அல்ல) நிகழ்ந்து விடுகிறது.
'ஏழாம் அறிவு' என்றொரு படத்தை ஏஆர்.முருகதாஸ் எடுத்துவிட்டு கொடுத்த பில்ட்அப்புக்கு விழுந்த அடி (வியாபார ரீதியில் அல்ல) சொல்லிமாளாது. பாவம், இன்னும் வரலாற்றாசிரியர்கள்- விமர்சகர்கள்- இணைய புத்திஜீவிகள் என்று பலராலும் தொங்கி தோரணமாகிறார். அவரின் வாழ்நாளில் அதிக மன உளைச்சலுக்கு உள்ளானது 'ஏழாம் அறிவு' படம் வெளியானதின் பின்னரான இரவுகளிலும்- பகல்களிலுமாகத்தான் இருக்கும். ஆர்வக்கோளாறின் மிகுதியால் 'தமிழனின் பரம்பரை அலகைப்பற்றியும்- போதிதர்மர் குறித்தும் பேசுகிறேன்' என்று கிளம்பிய முருகதாஸ், அவற்றில் கோட்டைவிட்டு கும்மியடிக்கப்பட்டு விட்டார். அத்துடன், அவரின் ஈழம்- ஈழத்தமிழர்கள்- போராட்டம் தொடர்பிலான வசனங்கள் அந்தப்படைப்பின் மீதான மலினத்தை அதிகப்படுத்தி விட்டது.
'ஏழாம் அறிவு' என்கிற வரலாற்று பிழைகள் நிரம்பிய- அல்லது திரித்துக்கூற முயன்ற படத்தில், இலகுவான வர்த்தகப் பேசுபொருளாக 'ஈழம்' கைக்கொள்ளப்பட்டது. அதுவும், படம் முழுவதும் ஈழம் பற்றிய ஆதரவு வசனங்களை சூர்யா பேசும் போது தொற்றிக்கொள்கிற எரிச்சல் இருக்கிறதே, அதை அனுபவித்தால்தான் புரியும். குறிப்பிட்டளவானோருக்கு அந்த வசனங்கள் ஏதோவோரு தொலைந்து போன நம்பிக்கையை மீட்டுக்கொடுத்தது சில மணிநேரத்துக்காவது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், விலகிநின்று பார்க்கிற பொழுது 'தமிழ் உணர்வு' என்ற விடயத்தை வியாபாரமாக்கிவிட வேண்டும் என்பதை ஏழாம் அறிவும்- அதனைச் சாந்தோரும் செய்தனர். அது அப்பட்டமான உண்மை.
சரி இந்த இடத்தில் கொஞ்சம் ஈழத்தமிழர்கள் பற்றிப் பேசலாம். அதுவும், அவர்களின் சினிமா என்கிற பொழுதுபோக்கு மையத்தின் மீதான ஆர்வம் பற்றி. ஈழத்தில் மோதல்கள் வீச்சம் பெற்றிருந்தபோதும் - சமாதான காலங்கள் போன்ற மாய்மால நாடகங்கள் அரங்கேறிய காலத்திலும்- கோர அழிவுகளுக்குப் பின் சடுதியாக மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட சினிமா என்கிற சாதனத்தை ஈழத்தமிழன் விட்டுத்தரவில்லை. ஏனெனில், தமிழ்ச்சினிமாவின் மீது ஈழத்தமிழனுக்கு அளவுகடந்த பாசமும்- பிணைப்பும் இருக்கிறது. அது பலருக்கு போதை மாதிரியானது. தன்னுடைய உறவுகள் வெள்ளாமுள்ளிவாய்க்காலுக்குள் சிக்கி உயிரை விட்டுக்கொண்டிருந்தபோதும் முதல்காட்சி டிக்கட்டுக்காக திரையரங்கு வாசலில் சண்டைபிடித்திருக்கிறோம்.
பல தருணங்களில் எங்களுக்கு உறவுகளின் மீதான அக்கறையைவிட விஜய்- அஜித்- ரஜினி- கமல் என்று நடிகர்களுக்கு கொடிபிடிப்பதே முக்கிய வேலையாகவும் இருந்திருக்கிறது- இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் 'ஈழத்தினை வைத்து வியாபாரம் பார்க்கிறார்கள்' என்று ஏப்போதாவது ஞானோதயம் மாதிரி பற்றிக்கொள்கிற 'அறச்சீற்றமும்' வந்துவிடுகிறது. ஆனால், அப்படி பற்றிக்கொள்கிற அறச்சீற்றத்தின் கால எல்லை- நிலைமை தொடர்பிலேயே எனக்கு சந்தேகம் இருக்கிறது.
அதுபோல, அறச்சீற்றம் என்பதுவும் பக்கத்திலிருக்கிறவரை தொற்றிக்கொள்கிற தடிமன் மாதிரியானது போல்தான் இருக்கிறது பல தருணங்களில். பலருக்கு தாங்கள் ஏன் அறச்சீற்றம் கொள்கிறார்கள் என்றே தெரிவதில்லை. அந்தவகையறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும். இதில், ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குறிப்பிடவில்லை. சிலர் தொடர்ந்தும் தங்களின் அறச்சீற்றத்தை தக்கவைத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இங்கு பேசவில்லை. வெளியில் தெரியாவிட்டாலும் உண்மையான ஈழ அக்கறை- உணர்வு உள்ளவர்களும் இருக்கிறார்கள் நம்மிடையில்.
ஈழத்தமிழர்களை ஆதரிக்காத அஜித்தின் ஏகனைப் புறக்கணிப்போம். சிங்களவர் இசையமைத்த வேட்டைக்காரனை புறக்கணிப்போம். மாதிரியான கோஷங்களும் 'படம்' காட்டுதல்களும் சமூகவலைத்தளங்களின் பெருக்கத்தினாலும் அதிகரித்துவிட்டது. நண்பரொருவர் தன்னுடைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தது மாதிரி, 'இலவசமாக வலைப்பூவொன்றை உருவாக்கிவிடலாம் என்பதற்காகவே சிலருக்கு அறச்சீற்றம் வந்துவிடுகிறது. ஆனால், வலைப்பூவில் எழுத ஆரம்பித்து பல நாட்கள் ஆகியும் தனக்கு அந்த அறச்சீற்றம் வரவில்லை' என்று கவலைப்பட்டிருந்தார். அந்தக்கவலையிலும் உண்மையிருக்கிறது.
இந்தப்பதிவினை எழுத தூண்டியது பதிவர் நண்பர் மதிசுதாவின் "இந்தியச் சினிமாக்காரர்களிடம் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் உணர்வுகள்' என்ற பதிவுதான். ஏனெனில், அவரின் அந்தப்பதிவுக்கு நான் பின்னூட்டம் எழுதிக்கொண்டிருந்தபோது மிகவும் நீண்டு சென்றுகொண்டிருந்தது. திடீர் என்று மின்தடை ஏற்பட்டு எல்லாமே அழிந்துவிட்டது. பின்னர் பதிவாகவே எழுதலாம் என்ற எண்ணத்தினால் இந்தப்பதிவை எழுதவேண்டியேற்பட்டுவிட்டது. ஈழத்தமிழர்களையும்- அவர்களின் போராட்டங்களையும் மலினப்படுத்தி வியாபாரம் செய்யப்படுவதை நான் என்றைக்குமே எதிர்க்கிறேன். அதுபோல, 'போர்- யுத்தம்- மோதல்- வன்முறை' என்ற வார்த்தைகளே எங்களுக்கு இப்போது அவசியமற்றதாகப்படுகிறது. ஏனெனில், நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிற வடுக்கள் ஆறவே நீண்ட காலம் தேவை. அப்படிப்பட்ட நிலையில உணர்வுகளைத் தூண்டி வியாபாரம் பார்ப்பது அருவருக்கத்தக்கதுதான்.
ஆனாலும், எல்லாவற்றையும் 'அறச்சீற்றம்' என்கிற பெயரில் எடுத்த எடுப்பில் என்னால் எதிர்க்கவும் முடியாது. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் 'புலிக்கொடி பொறித்த சோழமாந்தர் எலிக்கறி புசிப்பதுவோ' என்ற வைரமுத்துவின் பாடல் வரியில் ஈழத்தை அப்படியே வைத்துப் பார்ப்பது அவ்வளவு பொருத்தமற்றது. படத்தின் கருவே சோழர்கள்- பாண்டியர்கள் பற்றிய புனைவு. சோழர்களின் வரலாற்றில் புலிக்கொடி என்பது தனியொரு அடையாளமாகவே இருந்திருக்கிறது. அதுபோக, வறட்சியின் கொடுமையினால் தென்தமிழக மாவட்டங்களில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்ட வரலாறுகள் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவற்றையெல்லாம் எப்படி ஈழத்தமிழர்களுடன் எந்தவித யோசனையுமின்றி ஒத்திசைந்து பார்ப்பது. அதுபோல, ஆயிரத்தில் ஒருவனின் இறுதிக்காட்சிகள் ஏதேர்சையானது. அதனை, ஆராய்ந்து செல்வராகவனால் படம்பிடித்திருக்க வாய்ப்புக்கள் மிகவும் குறைவே.
அதுபோக, ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புக்களில் தன்னுடைய விருப்பங்களை கூறுவதற்கும் அதியுச்ச சுதந்திரம் இருக்கிறது. அந்தச் சுதந்திரம் திணிப்பாக மாறுகிற போதுதான் பிரச்சினையே வருகிறது. கவிஞர் தாமரை, 'தலைவன் வரவேண்டும். மீண்டும் ஈழம் மலரவேண்டும்.' என்று எழுதியதை என்னால் எதிர்க்கவோ- மறுதலிக்கவோ முடியாது. ஏனெனில், வர்த்தக எல்லைகளைத் தாண்டிய தாமரையின் விருப்பமாகவும் இருக்கலாம்.
அதற்காக, நீ அப்படி எழுதக்கூடாது என்று சொல்வது பொருத்தமற்றது. அதுபோக, அதனை மறுதலித்து நாம் முன்வைக்கிற முறைப்பாடுகளிலும் கூட ஓரளவு நியாயம் இருக்கவேண்டும். மற்றப்படி மதிசுதாவின் பதிவு மீது எனக்கு ஓரளவுக்கு உடன்பாடே இருந்தது. அவரின் பதிவுக்கு எழுத இருந்த பின்னூட்டத்தின் பெரும்பகுதியே பதிவில் வந்திருக்கிறது. அவரின் உணர்வுகளை கேள்விக்குள்ளாக்குவது இந்தப்பதிவின் நோக்கமும் அல்ல. ஏனெனில், உண்மையான உணர்வுகளை நான் என்றைக்கும் மதிக்கிறேன்.
தவிர்க்க முடியாத வர்த்தக சூழலில், அதுவும் 'ஈழம்' என்கிற உணர்வு விற்கப்பட்டுக்கொண்டிருக்கிற சூழலில் நாம் இருக்கிறோம். அவற்றை நாம் சரியாக இணங்கண்டு விலக்கிவிடுவது சிறந்ததே. மற்றப்படி, யதார்த்தங்களை உள்ளவாங்கிய அறச்சீற்றமே அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். அதற்காக, 'யாதார்த்தம்' என்கிற பெயரில் மற்றவர்கள் செய்கிற காட்டிக்கொடுப்புக்களை நான் இங்கு நியாயப்படுத்தவில்லை. பதிவின் தலைப்பில் இருக்கிற 'ஒஸ்தி' என்கிற சொல்லுக்கும் பதிவில் விளக்கம் கொடுக்கப்படவில்லை என்று யோசிக்காதீர்கள். சிம்புவின் ஒஸ்தியில், ஈழம் பற்றி ஒன்றையுமே காணக்கிடைக்கவில்லை. அதுகூட ஒரு அதிசயம்தான் எனக்கு!!
'வை திஸ் கொலைவெறி டி'யும், பொழுதுபோக்கு வர்த்தகமும்!
Posted On Tuesday, December 13, 2011 at at 8:29 AM by மருதமூரான்.'English- சு' என்ற புதிய மொழி வடிவில் எழுதப்பட்ட பாடலொன்று உலகம் பூராவும் கடந்த ஒரு மாதகாலமாக அதிகம் கேட்கப்பட்டும்- பாடப்பட்டும் கொண்டிருக்கிறது. அதுவும், பலமொழிகள்- பல வடிவங்கள்- பல குரல்கள் என்று பல பரிமாணங்களுடன். ஏ.ஆர். ரஹ்மானின் 'ஜெய்ஹோ'வுக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தியப்பாடல் இதுதான். 'Why This Kolaveri Kolaveri Kolaveri Di?' என்று அனுருத் இசையில், நடிகர் தனுஷ் பாடியது.
எளிய மெட்டமைப்பு. இசைக்கோர்ப்பு நுட்பங்கள் அதிகமில்லை. யாரும் பாடிவிட்டு போகலாம். முற்றுமுழுதாக நக்கல் தன்மை நிறைந்த மெல்லிய சோகம் ததும்பும் பாடல். மற்றப்படி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமே இல்லை. ஆனால், அந்த 'ஒன்றுமே இல்லை' என்பதை தனுஷ் 'English- சு' வடிவத்தில் எழுதியதன் மூலமும்- ராவாக பாடிய விதத்திலும் வெற்றிபெற வைத்துவிட்டார். இணையப்பரப்பில் Youtube ஒளிபரப்பியூடு கடந்த வாரங்களில் அதிகம் கேட்கப்பட்ட மூன்று பாடல்களில் இந்த கொலைவெறிப்பாடலும் இருக்கிறது. அதுபோல, ஆங்கில ஆர்வலர்களிடமிருந்தும்- பெண்ணியவாதிகளிடமிருந்தும் குறிப்பிட்டளவு விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.
இந்தியச் சினிமாவில் நாளாந்தம் பல பாடல்கள் வெளிவருகின்றன. அதில் சில பாடல்களே வெற்றிபெறுகின்றன. ஒருசில பாடல்களே காலம் தாண்டி நிலைத்து நிற்கின்றன. இந்த நிலைபெறுகையிலும்- வெற்றியிலும் கூட 'இணையம்' இப்போது தாக்கம் செலுத்துகிறது. 'பரிந்துரைத்தல்- பகிர்தல்' என்ற அடிப்படைகளிலேயே இந்த வெற்றிகள் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. அல்லது ஒரு படைப்பு அதிகம் விமர்சிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுமிருக்கிறது. பரிந்துரைப்பும், பகிர்தலும், விமர்சனமும், புறக்கணிப்பும் இணையச்சூழலில் மிக இலகுவானது.
சமூக வலைத்தளங்களில் இருக்கின்றவர்களில் சுமார் 80 வீதத்துக்கும் அதிகமானோர் ஒருதடவையேனும் தனக்கு பிடித்த விடயத்தை பகிர்ந்திருப்பார்கள் -பரிந்துரைத்திருப்பார்கள் அல்லது விமர்சித்திருப்பார்கள். இந்த இலகு தொடர்பாடல் நிலையிலேயே தற்காலத்தில் பொழுதுபோக்கு வர்த்தகம் (entertainment business) தங்கியிருக்கிறது. இணையத்தைத் தவிர்த்துவிட்டு பொழுதுபோக்கு வர்த்தகம் என்பது இப்போதெல்லாம் சாத்தியமும் இல்லை. அதுவும், 'சினிமாவும்- இசையும்- இலக்கியமும்' இணையத்துடன் அதிகம் ஒன்றித்துவிட்டது.
இணையத்தின் வருகை படைப்புத் தளங்களுக்கு குறிப்பிட்டளவு நன்மையை வழங்கியிருக்கிறது. அதுபோல, மறைமுகமாக தீங்கையும் வழங்கிவிடுகிறது. அத்துடன், திருட்டுப் படைப்புக்களை இலகுவாக ரசிகர்களிடம் அடையாளம் காட்டிவிடுகிறது. உதாரணத்துக்கு நடிகர் கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' திரைப்படம் 1996இல் வெளிவந்த போது ரசிகர்களினால் அதிகம் வரவேற்கப்பட்டது. கமலின் அய்யர் வீட்டு மாமி தோற்றமும்- கதைக்களமும் அதிகம் ரசிக்கப்பட்டு, விமர்சகர்களால்கூட கொண்டாடப்பட்டது. ஆனால், அப்போது இணைத்தின் வீச்சம் அதிகமில்லை. அதனால், கமல் ஓரளவுக்குத் தப்பித்தார்.
ஆனாலும், குறுகிய காலத்துக்குள் கமலின் குட்டு வெளிப்பட்டது. ஹொலிவூட்டில் 1993இல் வெளிவந்த MRS Doubtfire என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று அவ்வை சண்முகியின் மூலம் வெளிப்பட்டது. (இதற்கு இணையம் மட்டும் காரணமல்ல, படங்களை இலகுவழியில் பெற்றுக்கொள்ள முடிகிற விசீடி, டீவீடிக்களின் வருகையினாலும். எனினும், அண்மைக்கால திருட்டுக்களை இனங்காட்டியவையில் இணையம் முன்னணியிலிருக்கிறது) கமல் என்கிற கலைஞன் மீதான கேள்விகள் அதிகம் முன்வைக்கப்படுவதும் இணையத்தின் வீச்சு அதிகரித்த தருணத்திலேயே. இப்படி பல சினிமா- இசைத் திருட்டுக்களை ரசிகர்களிடம் காட்டிக்கொடுத்த பெருமை இணையத்துக்கு உண்டு. ஆனாலும், சில உத்தம படைப்பாளிகள் தங்களின் முளைக்கு வேலைகொடுத்து தெய்வத்திருமகள், நந்தலாலா வகையறாக்களைப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதுபோலவே, தரமற்ற படைப்புக்கள் அதிக வரவேற்பை பெறுவதும் இணையத்தில் இலகுவானது. மனிதனின் பொழுதுபோக்கு என்கிற மனநிலை குறிப்பிட்டளவானோருக்கு போதைபோன்று ஆக்கப்பட்டு மலினங்கள் இணையத்தினூடு விற்கப்படுகின்றன. இதற்குள்ளும் சிக்கி குறிப்பிட்டளவானோர் தரமான படைப்புக்கள் குறித்த தெளிவை இழந்து விடுகிறார்கள். இணையம் என்பது கிட்டத்தட்ட வீதிகளில் கூவி விற்பது மாதிரி யார் வீட்டுக்குள்ளும் அனுமதியின்றி நுழைந்துவிட முடியும், சமூக வலையமைப்பு தளங்களினூடு.
அதுவும், 'எங்களின் தேவை என்ன?' என்பதை இணைய வருகைக்குப் பின்னர் யார் யாரோ தீர்மானிக்கிறார்கள். நாங்களும் அந்த ஆளுகைக்குள் சிக்குண்டுவிடுகிறோம். குறிப்பிட்டளவானோருக்கு அது இறுதிவரையில் விளங்குவதும் இல்லை. இந்த நிலையையே பொழுதுபோக்கு வர்த்தகம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வலைவிரிக்கின்றது. அதுவும், சில பிரபலங்களை தங்களின் வர்த்தகத்துக்கு தெரிந்தும்- தெரியாமலும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
'Why This Kolaveri' பாடல் தமிழ் மொழி தவிர்த்த இந்திய ரசிகர்களிடம் துரித வரவேற்பைப் பெற்றதற்கு நடிகர் அமிதாப்பச்சனின் குறித்த பாடல் தொடர்பிலான 'ருவிற்றர்' தகவலும் ஒரு காரணம். அமிதாப்பை ருவிற்றரில் பின்தொடர்பவர்கள் ஆயிரக்கணக்கானோர். அதுபோல ஊடகங்களும் அவரை கவனித்துக்கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் அவர் தனக்கு பிடித்த விடயமொன்றை பரிந்துரைக்கிறபொழுது 'அந்த பொருளின்- படைப்பின்' வீச்சம் மக்களிடம் அதிகமாக இருக்கும். இதுவே, அதிகம் நிகழ்ந்தும் விடுகிறது.
இன்று 'Why This Kolaveri' இந்திய மக்களின் தேசிய கீதம் மாதிரியே ஆகிவிட்டது. பேஸ்புக் நட்பு வட்டத்துக்குள் இருக்கின்ற வேற்றுமொழிக்காரர்களினால் அதிகம் விசாரிக்கப்பட்ட வார்த்தை 'கொலைவெறி டி'. இப்படி பல தருணங்களில் ஒருவரின் விருப்பமேகூட வியாபாரத்தை கூட்டிவிடும். ஏனெனில், பரம ரசிக மனநிலை என்பது ரஜினி ஸ்டைலாக சிகரட் பிடிப்பதைப் பார்த்து தானும் பின்பற்றிக் கொள்ள முனைவது.
இணையம் என்பது அதிக கவனத்துடன் அணுகப்பட வேண்டியது. நாங்கள் அசட்டை செய்கின்ற பொழுது எங்களை வாரிச்சுருட்டி தன்னுள் இழுத்துச் சென்று திக்குத் தெரியாத இடங்களிலெல்லாம் போட்டுவிடும். கல்வி- தொழில் என்று எதையுமே கண்டுகொள்ளவிடாமல் போதையூட்டக்கூடியது. அதுதவிரவும், எங்களின் அனுமதியின்றி படுக்கையறை வரை வருகிற சக்தி இணையத்துக்கு இருக்கிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புக்குப் பின்னாலும் அதிக உழைப்பு இருக்கிறது. பயன்களும் அதிகமிருக்கிறது. அதேபோல, தீமைகளும் கொண்டிக்கிடக்கிறது. நாம்தான் அதில் எது எமக்கு அவசியமென்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
மனித மனம் என்பது நல்லவைகளை விட கொட்டவைகளின் மீது ஆர்வத்தைச் செலுத்துவதையே 'ஆதாம்- ஏவாள்' காலத்திலிருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இணையம் அவதானத்துடன் அணுகப்படவேண்டியது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக, குழந்தைகள்- சிறுவர்களின் இணையப் பயன்பாட்டை பெற்றோர்கள் அதிகம் அவதானிப்பது அனைவருக்கும் நல்லது. இணையம் குறித்து பயமுறுத்தல்களை வழங்குவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. ஆனாலும், அதிகளவு எச்சரிக்கையுணர்வை கொண்டு வருவது தேவையாக இருக்கின்றது. ஏனெனில், தனி மனிதனொருவனின் வெற்றி சமூகமொன்றின் வெற்றிக்கு சமமானது. அந்தச் சமூகத்தின் வெற்றியே இப்போது அவசியமானதும் கூட!.

ஷோபாசக்தியின் 'கப்டன்' சராசரியின் அறிவுக்கு எட்டியவரை!!
Posted On Friday, December 9, 2011 at at 4:39 PM by மருதமூரான்.யார் அவன்? அவனின் அரசியல் எப்படிப்பட்டது? அவன் விதைக்கின்ற கருத்தியல் எவ்வகையானது? என்ற கேள்விகளுக்கு அப்பாலிருந்தே படைப்பிலக்கியங்கள் மீதான என்னுடைய சராசரி ஆர்வத்தை செலுத்த முயல்கிறேன். ஏனெனில், இலக்கியங்கள்- சினிமாக்கள் மீதான என்னுடைய ஆர்வம் அவ்வளவுக்கு ஒன்றும் புத்திஜீவித்தனமாக இருக்காது. இருக்கவேண்டிய அவசியத்தையும் நான் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. அது, பொதுமைப்படுத்தப்பட்ட இலக்கிய- சினிமா- எழுத்துலக சூழலால் கொண்டாடப்பட்டாலும், தூற்றப்பட்டாலும் கூட!
ஷோபாசக்தியின் 'கப்டன்' சிறுகதையை நேற்று அவரின் தளத்தில் வாசித்தேன். ஷோபா அதிகம் விலகி வராத அந்த(?) வட்டத்துக்குள் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. மானுவேல் பொன்ராசாவினூடு சொல்லப்பட்ட கதையின் கரு எனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. என்றாலும், அந்த மொழிநடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 1990களுக்குப் பின்னரான ஈழத்து எழுத்தாளர்களில் 'கிழக்கு நோக்கி சில மேகங்கள்' எழுதிய பொ.கருணாகரமூர்த்தியும், ஷோபாசக்தியுமே எனக்கு பிடித்தமானவர்கள். அந்த பிடிப்பு அவர்களின் மொழி கையாழுகையினாலும், எளிமையினாலும் தொற்றிக்கொண்டதாகக் கூட இருக்கலாம். மற்றப்படி ஷோபா போட்டுக்கொள்கின்ற இணையவழி சண்டைகள் சச்சரவுகள் தொடர்பில் நான் அதிகம் கவனிப்பதில்லை. ஏனெனில், அது எனக்கு அவசியமற்றதும் கூட.
'யாழ்ப்பாணக் கோட்டை மதில்களை விடுதலைப்புலிகளின் ஆட்லறிகள் தகர்த்துக்கொண்டிருந்தன.' என்ற கருத்து அல்லது வரலாற்றுப்பிழை தொடர்பில் சசீவனும், விமலாதித்த மாமல்லனும் கூட ஏதோ தங்களுக்குள் பதிவுகளினூடு பேசிக்கொண்டதை படித்தேன். ஷோபா குறிப்பிட்ட ஆட்லறி என்பது 1990களின் ஆரம்பத்தில் புலிகள் பாவித்த 'பசீலன்' எறிகணைகள் என்று நினைக்கிறேன். இது பிழையாகக்கூட இருக்கலாம். ஏனெனில், புலிகளின் இராணுவ வளர்ச்சி மற்றும் யுத்திகள், உட்கிடக்கைள் தொடர்பில் எனக்கு போதிய அறிவு இல்லை. கோட்டை புலிகளின் கையில் விழுந்த போது எனக்கு 5 வயது. அதே கோட்டையை புலிகள் மீண்டும் இழக்கும் போது 10 வயது. ஆனாலும், புலிகள் தொடர்பில் அதிகம் அறிந்து வைத்திருக்கிற, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ஷோபா இழைத்தது பெரிய 'வரலாற்று- ஆவணப்படுத்தல்' தவறுதான்.
சரி அதைவிட்டு விடுவோம். ஷோபாவின் 'கப்டன்' வாசித்த பின்னர் இந்தச் சராசரியின் மனதில் தோன்றிய அரசியல் பற்றி பேசலாம். இப்போது உங்களின் மனதில் ஆரம்ப வரிகளுக்கும்- இவற்றுக்குமிடையிலான முரண்பாட்டை தெரிந்து கொள்ளலாம். ஆனாலும், அது அவசியமாகப்படுகிறது. அதனால், விதிகள் மீறப்படுவதை முன்னிறுத்திவிட்டு எழுதுகிறேன்.
'புலி- தமிழ்த் தேசிய எதிர்ப்பு' என்கிற அரசியல் நிலையிலிருந்து அண்மைக்காலத்தில் அதிகம் எழுதுபவர்கள் ஷோபாசக்தி, த.அகிலன், யோ.கர்ணன் ஆகியோர். த.அகிலன் தற்போது தன்னுடைய தளங்களில் வன்னி முகாம்களுக்குள் இருந்து எழுதப்படும் சில கட்டுரைகளை பதிவேற்றுவதோடு சரி. மற்றப்படி, அவரின் படைப்பிலக்கியங்களை காணக்கிடைப்பதில்லை. ஆனால், 'தேவதைகளின் தீட்டுத்துணி' தொகுப்பை எழுதிய யோ.கர்ணன் தொடர்ந்தும் எழுதி வருகிறார். ஷோபாவின் மற்றுமொரு வளர்ந்து வரும் பிரதியாகவே எனக்கு யோ.கர்ணன் தெரிகிறார். அதற்கு, அவர்கள் இருவரும் தங்கியிருக்கும் அந்த வட்ட (?) கதைக் களங்கள் கூட காரணமாக இருக்கலாம். ஒப்பீடுகள் தேவையற்ற போதிலும், தவிர்க்க முடியாமல் சொல்ல வேண்டியிருக்கிறது மனதில் தோன்றுவதை.
ஈழத்து இலக்கிய சூழலில் 'மாற்று கருத்தியல்' என்பது பல தருணங்களில் சரியாக அடையாளப்படுத்தப்படாமல்- 'புலி எதிர்ப்பு மட்டுமே' என்றாகிய கொடுமையும் நடந்திருக்கிறது. அதன்தொடர்ச்சியே அதிகம் 'தென்னிந்திய தமிழ்- தலித்திய' இலக்கிய சூழலாலும் கொண்டாடப்பட்டது. புலி எதிர்ப்பு- தலித்திய வழி இலக்கியங்களினூடு அதிகம் கவனிக்கப்பட்டவர் ஷோபா. அவரின், கதைகளும்- புனைவுகளும் கூட அதிகம் இன்று வரை, அதனைத் தாண்டி வரவில்லை.
அதுபோல, புலி எதிர்ப்பு இலக்கியங்களை மறுதலிக்கின்ற பெரும்பான்மை புலம்பெயர் சமூகத்தினால் 'துரோகிகள்' என்ற வார்த்தையைத் தவிர, வேறு தீர்க்கமான விவாத வழியில் ஷோபா வகையறாக்களை எதிர்த்து வெற்றிகொள்ள முடியவில்லை. அந்த நீட்சியே யோ.கர்ணன் வரை வந்து நிற்கிறது. ஆனால், துரோகிகள் என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கூட அழகாக தங்கள் பக்கம் சாய்த்து மாற்றுவழி இலக்கியம் என்ற பெயரில் புனைவுகள் படைக்க இந்த குறிப்பிட்ட சிலருக்கு முடிகிறது. ஆக, பெரும்பான்மையினருக்குள் இருந்து புறந்தள்ள முடியாத 'புலி- தமிழ்த் தேசிய ஆதரவு' அரசியலை, அவர்கள் இலகுவாக கடந்து வருகின்றனர். இதுவே, இன்றுவரை தொடர்கிறது.
போர் கொண்ட தேசத்திலிருந்தே சிறந்த படைப்பிலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன என்று சொல்லப்படுகின்றது. ஆனால், ஈழத்து இலக்கிய சூழலில் 'புலி எதிர்ப்பு' என்ற ஒரே வட்டத்துக்குள் சுழல்கின்ற நிலையைத் தவிர வேறு படைப்புக்களை காண முடிவதில்லை. (அல்லது, நான் வாசிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.) அல்லது, பொ.கருணாகரமூர்த்தி வகையறாக்கள் அதிகம் எழுதுவதில்லை.
ஒவ்வொருவருக்கும் தன்னுடைய அரசியலை பேசுவதற்கு உரிமையிருக்கிறது. ஆனால், அந்த உரிமையை ஒரு கதைக் களத்திலிருந்தே பேசுவேன் என்கிற போதுதான் ஷோபா, கர்ணன் உள்ளிட்டோரின் மீதான எரிச்சல் தோற்றம் பெறுகிறது. ஒரே விடயத்தை- ஒரு களத்திலிருந்து, வேறு பெயர்களில்- நிறங்களில் பேசுவதால் புதிய புனைவுகள் என்று எப்படி ஏற்றுக்கொண்டுவிட முடியும். அதனையே, அதிகம் காண முடிகிறது. அவற்றைத் தவிர்த்துவிட்டு புதிய கதைக்களங்களினூடு, அவர்களின் அரசியல் பேசப்படுவதுமில்லை. அதனை, அவர்கள் விரும்புவதுமில்லை. புலி எதிர்ப்பு என்ற அடையாளம் இலகுவாக வீச்சம் பெறவும், தமிழ் இலக்கிய சூழலில் உதவலாம். அதுதான், அதன் அடிப்படையாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே தமிழ் படைப்பிலக்கியம் என்ற வரலாற்று சாட்சியாகிவிட்டால்(?). அதுபோலவே, பெரும்பான்மை தமிழ்ச் சமூகமும் படைப்பிலக்கியங்களை ஓரளவுக்காவது திறந்த மனதுடன் பார்க்கிற மனநிலைக்கு வரும்பொழுதே நல்ல படைப்புக்களுக்கான சூழல் சாத்தியமாகும்.
ஷோபாவின் ஈழத்து மொழிவழக்கின் மீது எனக்கு எப்போதுமே காதல் இருக்கிறது. 'கப்டன்' மானுவேல் பொன்ராசாவிற்கு அன்னியஸ் மீது இருந்த காதல் மாதிரி. ஏதேதோ திசைகளில் தன்னுடைய அரசியலையும்- கருத்தியலையும் விதைத்துச் சென்ற ஷோபா, இறுதியில் அன்னியஸ்ஸிடம், பொன்ராசா விட்டுச் சென்ற 'நீலக்கற்கள் பதித்த தோடு' மாதிரி எதையாவது விட்டுச் செல்ல வேண்டாமா?! எற்கனவே விட்டுச் சென்றதை மீண்டும் மீண்டும் விட்டுச்செல்வதால் அவ்வளவு அர்த்தம் கிடைத்துவிடாது!!
படம்: ஷோபாசக்தியின் பேஸ்புக் பக்கத்தில் எடுக்கப்பட்டது.

‘மயக்கம் என்ன’ செல்வராகவனின் திமிர் பெண்கள் மீது!
Posted On Saturday, December 3, 2011 at at 10:17 AM by மருதமூரான்.எங்களைப் பாதித்த சில விடயங்கள் வாழ்க்கை பூராவும் தவிர்க்க முடியாமல் பயணப்பட்டுக்கொண்டிருக்கும். அதில், காதலுக்கும்- பெண்களுக்கும் முக்கிய இடமுண்டு. எப்போதோ எங்களை ஆட்கொண்ட பெண்ணொருத்தியின் சாயலையொத்த, பெண்களை கடந்து போகின்ற தருணத்துக்குள்ளேயே பிடித்துப்போகிறது. அந்த ‘ஈர்ப்பு’ தூக்கியெறியப்படாமல் மனதுக்குள் எப்போதுமே இருக்கிறது.
அப்படிப்பட்ட ஈர்ப்பின் வெளிப்பாட்டையே செல்வராகவனின் படங்களில் வருகின்ற காதலிகளும் கொண்டிருக்கிறார்கள். முதல் தருணத்திலேயே சில பெண்கள் மீது காரணமின்றி கோபம் வரும், அதுவே போகப்போக ஈர்ப்பாக மாறிவிடுவதும் உண்டு. அப்படிப்பட்ட பெண்களின் குணவியல்புகளில் தவிர்க்க முடியாமல் திமிரும்- அலாதியான அழகும் எப்போதுமே இருக்கும். இதனை பலரும் உணர்ந்திருப்பார்கள்.
செல்வராகவனும் அப்படிப்பட்ட பெண்ணொருத்தியின் பாதிப்பை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கிறார். அதுவே, ‘காதல் கொண்டேன்’ சோனியா அகர்வாலில் ஆரம்பித்து ‘மயக்கம் என்ன’ ரிச்சா வரை தொடர்கிறது. அந்தப் பாதிப்பை ஒரே வடிவத்துக்குள் வைத்துக்கொண்டாலும், செல்வராகவன் அந்தப் பெண்களைச் சேர்த்து பின்னுகின்ற திரைக்கதைகளிலே வெற்றி பெறுகிறார்.
சில படங்கள் குதூகலிக்க வைக்கும். சில படங்கள் ஆக்ரோசப்படுத்தும். பல படங்கள் கடுப்பைப் கிளப்பும். எப்போதாவது சில படங்கள் தான் மனதளவில் பீல் பண்ண வைக்கும். அண்மைக்காலத்தில் என்னை அதிகம் பீல் பண்ண வைத்த படங்கள் ‘Friends with Benefits’சும், ‘மயக்கம் என்ன’வும். மனதை பாதித்த படங்கள் என்பதற்காக ஆகா- ஓகோ என்று கொண்டாட வேண்டிய அம்சங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.
‘மயக்கம் என்ன’ என்கிற பெயரில் ஏற்பட்ட மயக்கம், ஜீ.வி.பிரகாஸின் ‘பிறைதேடும் இரவிலே…..’ என்கிற இசையினால் இன்னும் அதிகமானது. அது படம் பார்க்கும் வரையில் அதிகரித்தே வந்தது, அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு இன்றி. அதுவே, ‘மயக்கம் என்ன’வை ரசிக்க வைத்தது. செல்வராகவனின் படங்களில் பார்த்துக் பழக்கப்பட்டுப் போன கதாபாத்திரங்கள், காட்சியமைப்புக்கள். ஆனாலும், ரசிக்க முடிகிறது.
பலரும் ‘மயக்கம் என்ன’வின் மீது சொல்கின்ற குற்றச்சாட்டு மிகமெதுவான திரைக்கதை என்று. என்னைப்பொறுத்தளவில் வேகமாக நகரும் தேவை மயக்கம் என்ன படத்துக்கு இல்லை. இதுவொன்றும் அதிரடி படம் இல்லை. காதலையும்- இயல்பான வாழ்வியலையும் சொல்லும் படம்.
‘இயல்பான வாழ்வியல்’ என்கிற சொல்லை வைப்பதனை பலரும் எதிர்க்கலாம். அடுத்தவனின் காதலியாக அறிமுகமாகின்ற பெண்ணை தன்னுடைய காதலியாக மாற்றிக்கொள்வது எப்படி இயல்பான வாழ்வியல் என்பது என்று? எங்களுடைய சமூகத்தில் இதற்கான ஆயிரம் ஆதாரங்கள் எல்லாக் காலத்திலும் இருக்கின்றன. ஆனாலும், மயக்கம் என்ன ‘ரிச்சா’ பப்புக்கும்-கிளப்புக்கும் போகும் டேட்டிங் பெண் என்பதுதான் இங்கு பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
ஆனாலும், அப்படிப்பட்ட வாழ்க்கையைக் கொண்ட குறிப்பிட்டளவானவர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். சிலருக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை கிடைத்திருக்கிறது. பலருக்கு கிடைக்கவில்லை. ஆக, அந்தப் பலருக்குள் இருக்கின்ற ‘சமூகம்’ பப்புக்கும்- கிளப்புக்கும் போகும் டேட்டிங் பெண்ணை (காதலியை) ஏற்க மறுக்கிறது அவ்வளவுதான்!
இயக்குனர் அமீர் சுல்தானின் முதல் படமான ‘மௌனம் பேசியதே’யில் பிடித்துக்போன ராம்ஜீயின் ஒளிப்பதிவு நுட்பம், ‘மயக்கம் என்ன’ வரையில் தொடர்கிறது. துருத்திக்கொண்டு நிற்காத ஒளிப்பதிவு. கதைக்கும்- காட்சிக்கும் தேவையானதை எந்தவித குறைச்சலுமின்றி வழங்கும் திறன் என்பது எப்போதுமே அவரின் மீது பாரிய ஈடுபாட்டை வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதுபோலவே, ஜீ.வி.பிரகாஸ் என்கிற இசை ஆளுமையும். ‘வெயில்’ மூலம் அசத்தலான அறிமுகத்துடன் ஆரம்பித்து இடையில் சில படங்களில் சறுக்கியிருந்தாலும் தன்மை பொல்லாதவன், மதராசப்பட்டினம், ஆடுகளம் என்று நிரூபித்து இன்றும் மயக்கம் என்னவிலும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். ‘மயக்கம் என்ன’ ராம்ஜீயும், ஜீவியும் இல்லாவிட்டால் இவ்வளவு திருத்தமாக கிடைத்திருக்குமா தெரியாது.
தனுஷ் என்கிற நடிகரைப்பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை. இந்தியாவின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் அவருக்கான இடம் தவிர்க்க முடியாதது. தன்னுடைய சினிமா வர்த்தகத்தின் அளவை கூட்டிக்கொள்ள தனுஷ் நடிக்கின்ற மாப்பிள்ளை, வேங்கை வகையறாக்களைத் தவிர்த்துவிட்டால், தமிழ் நடிகர்களில் அவரின் நடிப்புக்கு அருகில் அண்மைக்காலத்தில் யாரையும் வைத்துப் பார்க்க முடியாது.
பார்த்த மாத்திரத்திலேயே எரிச்சலூட்டிய ‘ரிச்சா’ என்ற நடிகை மீது படத்தின் முடிவில் இனம்புரியாத ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டு விட்டது. தமிழில் முதல் படம் என்கிற எண்ணமே ஏற்படாத வண்ணம் நடித்திருக்கிறார். செல்வராகவனின் மோதிரக்குட்டு வேலை செய்திருக்கிறது. பார்க்கலாம் ஒஸ்தியில் ரிச்சா எப்படி நடித்திருக்கிறார் என்று!
‘மயக்கம் என்ன’வின் இறுதிக் காட்சியில் தனுஷின் தொலைபேசி அழைப்புக்கு ரிச்சா சொல்லும் ‘ஹலோ…’ இப்போதும் மனதுக்குள் ஏதோ செய்கிறது. அந்தக் ‘ஹலோ’ சிலருக்காவது தொலைந்து போன காதலை மீட்டெடுத்துக் கொடுத்திருக்கும். அதுவே, இயக்குனர் செல்வராகவனினதும், ‘மயக்கம் என்ன’வினதும் வெற்றியாகவும் இருக்கும்!!