மழைகால மின்மினி!
Posted On Thursday, November 10, 2011 at at 8:45 AM by மருதமூரான்.
மழை கால இருட்டுக்குள்,
அதிகமாக மின்னும் மின்மினி மாதிரியே;
கொஞ்சம் அதிகமாக பிரகாசித்து
அடங்கிப் போனது அவளின் புன்னகை!
இறுதிக்கால புன்னைகையில்தான்
அதீத வெறுமையும்- அளவுக்கு மீறிய அர்த்தமும்
அடங்கிக் கிடக்கிறது!!.
எப்போதாவது,
அவளை நான் அணைக்க மறுக்கிற தருணங்களில்-
இயல்பாகவே மரணித்துப் போவது போல உணர்கிறேன்.
உடலாலோ- உள்ளத்தாலோ
எந்நேரமும்
அவளை இறுகப் பற்றிக் கொண்டேயிருக்கிறேன்.
அதுவே,
என்னுடைய இறுதி ஆசையாகவும் இருக்கிறது.
காதல் வாழ்வில் மட்டுமல்ல,
சாவிலும் கூட
மகிழ்வையும்- மனநிறைவையும் தரு(கிறது)ம்!!.

