சனத் ஜெயசூர்யா: தோற்றுப்போன சாதனையாளன்!
Posted On Thursday, June 30, 2011 at at 11:36 AM by மருதமூரான்.இலங்கை கிரிக்கட் வரலாற்றை முரளியும்- சனத்தும் இன்றி எழுதிவிட முடியாது. அதிக பக்கங்களை இவர்கள் இருவருமே எடுத்துக்கொள்வார்கள். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் முரளி டெஸ்ட் போட்டிகளிலிருந்து 800 விக்கட்டுக்கள் பெற்று ஓய்வுபெற்றிருந்தார். சனத்தும் தன்னுடைய 22 வருட சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையை விருப்பமின்றி நேற்றுமுன்தினம் முடித்துக்கொண்டார் அல்லது முடித்துக்கொள்ள அறிவுத்தப்பட்டார்.
ஒரு பொக்ஷிங்டேயில், அதாவது 1989 டிசம்பர் 26ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய சர்வதேச கிரிக்கட்டை 20 வயது சனத் ஜெயசூர்யா ஆரம்பிக்கிறார். அந்தப் போட்டியில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறார். இலங்கை அணி 30 ஓட்டங்களினால் தோற்றுப்போகிறது. அப்போது, யாரும் நினைக்கவில்லை சனத் கிரிக்கட்டின் பலதுறைகளிலும் சாதனைகளை தன்னகத்தே கொண்டுவரப்போகிறார் என்று!
ஒருநாள் கிரிக்கட்டின் ஆரம்ப அதிரடி ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான சிறிகாந்த் ஆரம்பித்து வைத்தார். ஆனாலும், அதனை பலமடங்கு உயர்த்திக்காட்டி பலரையும் தன்னுடைய ஆட்ட தன்மையை பின்தொடர வைத்த பெருமை சனத்துக்கு உண்டு. அதுவும், களுவிதாரண என்கிற சக வீரருடன் அவரின் ஆரம்ப துடுப்பாட்டம் கிளாசிக் ரகம்.
என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் 22 வருடங்கள் சர்வதேச கிரிக்கட் ஆடியவர்கள் சனத்தும்- சச்சினும் மட்டுமே. சச்சின் இன்னும் 2 ஆண்டுகளாவது சர்வதேச கிரிக்கட்டில் நிலைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவரிலும், ஒருநாள் ஆட்டங்களில் ‘மச் வின்னர்’ என்ற சொல்லுக்கு சச்சினைவிட, சனத்தே பொருத்தமானவர். ஓட்டங்கள்- விக்கட்டுக்கள் என்று தொடர்ந்தும் சகலதுறை வீரராக வலம் வந்தவர். டெஸ்ட் ஆட்டங்களில் சச்சினை, சனத்தினால் எந்தக்காலத்திலும் நெருங்கக்கூட முடியவில்லை.
இப்படி, இலங்கை அணியினை பல தருணங்களில் தனியொரு வீரராக தோளில் சுமந்த சனத் ஜெயசூர்யா இறுதி 4- 5 வருடங்களில் நடந்து கொண்ட விதம், அவரின் சாதனைகளை மறக்க வைத்துவிட்டது. 42 வயதான சனத் ஜெயசூர்யா ஆரம்ப வீரராக ஆடுகிறார். அதே அணியில் 21 வயது டினேஸ் சந்திமால் உதிரி வீரராக ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
‘கனவான்’ வீரர்கள் தங்களுடைய ஆட்டத்திறன் ஓரளவு குறைகின்றது என்று தெரிகிறபோதே ஓய்வுபெற்று இளம் வீரர்களுக்கு வழிவிடுவதே அவர்களுக்கும்- அணிக்கும் நல்லது. அதனைவிடுத்து, ஓய்வுபெற மாட்டேன் என்று அடம்பிடிப்பது புதிய வீரரொருவருக்கான இடத்தை பிடித்துக்கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும். அதனையே, சனத் இறுதி 5 வருடங்களில் செய்து கொண்டிருந்தார். இதனால், பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக தொடர்ந்தும் செயற்பட்ட ஜீவன் மென்டிஸ் தன்னுடைய சர்வதேச கிரிக்கட் அறிமுகத்தை 28 வயதில் மேற்கொள்ள வேண்டிய நிலையெல்லாம், சில சிரேஸ்ட வீரர்களின் அடம்பிடிப்புக்களினாலும் நிகழ்கிறது. இது சின்ன உதாரணம் மட்டுமே. சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு இளம் வீரர்களுக்கு அனுபவம் அவசியமாகிறது. அதனைப்புரிந்து கொண்டு சிரேஸ்ட வீரர்கள் செயற்படுவதும் முக்கியமானது. ஆனால், அதனை சனத் அதிக தருணங்களில் நிறைவேற்றவில்லை.
டெஸ்ட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது வரலாறு. அதுபோல, 15 மாதங்களுக்கும் அதிக காலம் சர்வதேச போட்டிகள் எதிலும் ஆடாத அவர், அரசியலுக்கு சென்ற தருணத்திலாவது சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். அதனையும் செய்யாமல், மீண்டுமொரு சர்வதேசப் போட்டியிலேயே ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பது ஒரு சாதனை வீரனுக்கு அழகல்லவே.
இலங்கையில் மட்டுமல்ல கிரிக்கட் விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் சனத்தின் அதிரடி ஆட்டத்தினை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றனர். கிரிக்கட்டில் ஆர்வமின்றியிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறுவர்களை (1996இல் சிறுவன்) அதன்பக்கம் ஈர்த்த பெருமை அவருக்குண்டு. ஆனால், அவர் இறுதிக் காலங்களில் நடந்து கொண்ட விதம் அவரின் மீதான மரியாதையை குறைக்கவே செய்தது.
சனத் ஜெயசூர்யா அவர்களே….! நீங்கள் சாதனை வீரர்தான். ஆனால், இறுதிக் காலங்களில் தோற்றுப்போய்விட்டீர்கள். எதுஎப்படியோ, குடும்ப வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள். ஏனெனில், அரசியலில் உங்களினால் நிலைத்து நிற்க முடியாது என்று நம்புகிறேன்!!
வாய்ப்பற்ற நடிகர்களின் முதுகு சொறிதலும், ஈழ அக்கறையும்!
Posted On Wednesday, June 29, 2011 at at 11:42 AM by மருதமூரான்.இலங்கையிருக்கின்ற தமிழ் மக்கள் அதிக வருத்தமும், வலிகளையும் வாங்கிக்கொண்டது 2007- 2009 காலப்பகுதி. இதே காலப்பகுதியில், தன்னுடைய தொழில்முறை மற்றும் நட்புமுறை பயணங்களை நடிகை ராதிகா, தன்னுடைய கணவரும்- தென்னிந்திர திரைப்பட நடிகர்கள் சங்க தலைவருமான சரத்குமாருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.
அப்போதெல்லாம், சிரச மற்றும் சக்தி தொலைக்காட்சிகளில் அவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்புக் செய்யப்பட்டன. சிரச தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சியொன்றில் நடிகை ராதிகா அழகான சிங்களத்தில் பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன். அதேகாலப்பகுதியில் கிளிநொச்சியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
மேற்சொன்னது ஒரு தகவலுக்காக. இனி விடயத்துக்கு வருவோம்.
‘ஈழத்தில் நடந்திருக்கிற மனிதாபிமானமற்ற கொலைகளைக் கண்டித்து’ இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும். அதனை, வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்தும். அதுவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், “இலங்கையின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்” என்று அறிவித்த சில நாட்களேயான நிலையில் அவசர அவசரமாக வந்திருக்கின்றது நடிகர் சங்கத்தின் அறிவிப்பு.
இந்த அறிவிப்பு, பல அரைக்கிறுக்கு ஈழ ஆதரவாளர்களை குளிர்வித்திருக்கும். ஆனால், ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்கின்ற உறவுகளுக்கு இதுவொன்றும் மகிழ்ச்சியை கொடுத்துவிடாது என்று நம்புகின்றேன். ஏனெனில், ஈழத்தில் இன்னும் தமிழ் மக்கள் எஞ்சியிருக்கிறார்கள். இந்தியா விதிக்கின்ற பொருளாதாரத்தடை அந்த மக்களையும் சேர்த்தே பாதிக்கும். அதுதவிரவும், அவர்களில் குறிப்பிட்டளவானோர் ஏதோவொரு வகையில் இந்தியாவுடன் தொழில்முறை உறவைப் பேணுபவர்கள். அவர்களும் நிர்க்கதியாகவேண்டி வரும்.
போராட்டத்தினை நடத்துவதற்கு முன்னர் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?. அந்த போராட்டத்தின் தன்மை என்ன? கோரிக்கைகள் எப்படிப்பட்டது? அதனால், ஏற்படும் விளைவுகள் என்ன? என்றெல்லாம் யோசித்து மக்களின் பாதிப்பை அதிகளவில் தவிர்த்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமே பயனுள்ளதாக அமையும். அதனைவிடுத்து, ஆட்சியிலுள்ளவர்களுக்கு அவசரமாக குடை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்தவித யோசனைகளுமின்றி முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தினால் எந்தப் பயனும் விளைந்துவிடாது. பல தருணங்களில் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.
ஈழத்தில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது தன்னுடைய தொழில் விருத்தி குறித்து சிந்தித்து செயற்பட்ட நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் எங்கிருந்து ஈழத்தமிழர்கள் மீது இவ்வளவு பாசம் வந்தது. அதுதவிரவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல நடிகர்களுக்கும் தங்களை வளப்படுத்திக்கொள்ள ஈழமும், ஈழத்தமிழர்களும் தேவைப்படுகிறார்கள். அதற்காக, அதிகப்படியானவர்கள் போலிப் பாசத்தை காட்டுகிறார்கள். உண்மை நிலையை அறிந்து போராடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
‘நடிக்க பெரிதா வாய்ப்புக்கள் வரவில்லை. தங்களுடைய கதாநாயக பிம்பம் கலைக்கிறது’ என்ற பயம் பல நடிகர்களுக்கு வருவது இயல்புதான். எப்போதும், எல்லா நடிகர்களையும் மக்கள் கொண்டாடுவதில்லை. அதற்காக, உங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஈழமும், ஈழமக்களும் என்ன போடுதடியா?! பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இருக்கவேயிருக்கிறது 1008 தொலைக்காட்சிகள். அங்கு ஏதாவது தொடர்களில் முகத்தை காட்ட வேண்டியதுதானே?!
நடிகர் சரத்குமார் அவர்களே………..! தமிழகத்தில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படுகின்ற போது, மு. கருணாநிதி- ஜெயலலிதா ஜெயராம் இருவரில் யார் முதல்வராகிறரோ அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்துவீர்கள். அந்தவிழாவில் காலில் விழுந்து, வாய் வலிக்க, நாக்கு கூச புகழ்ந்து தள்ளுவீர்கள். அதுதானே, வாடிக்கை. அதனைவிடுத்து, ஏன் ஈழத்தமிழர்கள் மீது இந்த யோசனைகளற்ற அக்கறை. ஈழ மக்களின் மீது நீங்கள் கொள்ளும் பாசமிருக்கிறதே. அது எங்களை மெய்சிலிருக்க வைக்கிறது!
உங்களது அரசியலுக்கு எங்களை ஊறுகாயாக பாவிக்காதீர்கள். தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வருபவர்கள் நாங்கள். எங்களை விட்டுவிடுங்கள்!!
இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை! முடியவும் இல்லை!!
Posted On Tuesday, June 28, 2011 at at 11:49 AM by மருதமூரான்.‘180’ ஆயிரம் காதல்களில் ஒன்று! ஆனாலும், அழகு!!
Posted On Monday, June 27, 2011 at at 10:37 AM by மருதமூரான்.அப்பாவிப்பெண்கள்: அந்தரங்கத்தின் ஆபத்து: மயக்கும் இசை!
Posted On Friday, June 24, 2011 at at 10:52 AM by மருதமூரான்.

சில வருடங்களுக்கு முன்னே போன் செக்ஸ் பற்றி பேசிய சாருவின் ஸீரோ டிகிரி
Posted On Thursday, June 23, 2011 at at 12:26 PM by மருதமூரான்.பிரபாகரனின் மனைவி- பிள்ளைகள் சர்ச்சை: ஊழலில் சிறிலங்கா கிரிக்கட்!
Posted On Wednesday, June 22, 2011 at at 10:57 AM by மருதமூரான்.“சமஸ்கிருதம்“தான் கணனிக்கு பொருத்தமான மொழி என்று கண்டுபிடித்துச் சொன்ன சுப்ரமணியசுவாமி போல, இலங்கை- இந்திய அரசியலில் எப்போதுமே பல கோமாளிகள் இருந்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கோமாளிகள் இல்லாத அரசியலை நினைத்துப் பார்ப்பது அவ்வளவு நல்லாயிருக்காது. ஏனெனில், அவர்களின் கொள்கைகள்- கோட்பாடுகள் தாண்டி, அவர்களின் இராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களை பல தருணங்களில் அதிசயிக்க(?) வைக்கும். மேற்குறிப்பிட்ட ஆரம்பத்திற்கும் இனிவரும் விடயத்துக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தப்படுத்திப் பார்த்தாலும் நான் பொறுப்பாளி அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி- பிள்ளைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பேணிப்பாராமரித்து வருவதாக, இலங்கை ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல கிரிக்கட் வர்ணனையாளருமான(?) ஏ.எச்.எம் அஸ்வர், நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார். இந்தச் செய்தியில் உண்மையிருக்கும் பட்சத்தில் நான் மிகவும் சந்தோசப்படுவேன். எந்தவொரு உயிரும் பலிவாங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்த அரசாங்கம், அந்த மோதல்களின் போது பிரபாகரனின் மனைவி- பிள்ளைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தியை அப்போது வெளியிட்டிருந்தது. ஆனால், அந்தச் செய்திகளை இரண்டு வருடங்கள் கழித்து அதே அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மறுத்துரைத்திருக்கின்றார். இந்த குழப்பங்களுக்குப் பின்னாலுள்ள உண்மை எது? என்று அறிவிக்க வேண்டிய கடப்பாடும் அதே அரசாங்கத்துக்கு இருக்கின்றது. பிரபாகரனின் மனைவியும், பிள்ளைகளும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவர்களை சதாரண வாழ்க்கைக்கு அனுமதிக்க வேண்டும். ஏனெனில், முன்னாள் போராளிகளுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை வழங்குவதாக கூறுகின்ற அரசாங்கத்துக்கு, இதனையும் செய்ய முடியும் என்றே நினைக்கின்றேன்!. இல்லாவிட்டால், பிரபாகரனின் மனைவி- பிள்ளைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் வெளியிட்ட கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு இந்த சர்சைகளுக்கு முடிவு கட்டப்படுமா?! இலங்கை அரசியலில் எல்லா வியாக்கியானங்களும், விண்ணத்தணங்களும் எப்போதுமே சாத்தியம்!! பலிகடவாகும் வீரர்கள், தப்பிக்க நினைக்கும் சிறிலங்கா கிரிக்கட்! நிர்வாகத்திறைமையற்றவர்கள் தலைமை வகிக்கின்ற எந்த நிறுவனமும் சிறப்பாகச் செயற்பட முடியாது. அப்படிப்பட்டவர்களுடன், ஊழல் பேர்வழிகளும் சேர்ந்தால் குறித்த நிறுவனத்தின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இதற்கு அண்மைக்கால உதாரணம் சிறிலங்கா கிரிக்கட். பில்லியன்களில் கடன், மில்லியன்களில் ஊழல், ஊக்கமருந்து சிக்கல் என்று எங்கு திரும்பினாலும் சிக்கலுடன் இருக்கின்றது சிறிலங்கா கிரிக்கட். உலகக் கிண்ணக் கிரிக்கட் இறுதிப்போட்டியில் இலங்கை தோல்வியடைந்த்தைத் தொடர்ந்து வதந்திகளும்- ஊகங்களும் அதிகரித்த தருணத்தில் அணித்தலைவர், உதவித்தலைவர், தேர்வுக்குழுவினர் மட்டுமல்ல அணியின் பேரூந்து ஓட்டுனரும் இராஜினாமச் செய்ய ஊகங்கள் உர்ஜிதமாகிய தோற்றத்தைத் தந்தன. இதற்குப் பின்னால், சிறிலங்கா கிரிக்கட் பற்றி வெளிவந்த செய்திகளில் அதிகமானவை அதன் ஊழல்கள்- சீரற்ற நிர்வாகம் குறித்தே இருந்தது. உலகக் கிண்ண இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவில் ஈலியந்த வைட் என்கிற வைத்தியருக்கும்(?) நன்றிகள் என்று சங்ககார குறிப்பிட்டிருந்தார். யார் இந்த ஈலியந்த வைட்? அறிந்து கொள்ள நண்பர் றிசான் ஷெரிப் எழுதிய “அரசமாளிகை ஊக்க மருத்துவர்“ என்கிற பதிவை வாசியுங்கள். பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்படாத வைத்தியரொருவரை சர்வதேச அணியொன்றின் மருத்துவத்தேவைகளை கவனித்துக்கொள்ள சிறிலங்கா கிரிக்கட் அனுமதித்துள்ளது. காரணத்தைக் கோரினால், “அணித்தலைவர் சங்ககார எழுத்துவடிவில் கோரினார்“ என்று சிறிலங்கா கிரிக்கட்டின் செயலர் நிஷாந்த ரணதுங்க பதிலளிக்கின்றார். இந்தப் பதிலில் எவ்வளவு பொறுப்பற்ற தன்மை தெரிகின்றது. அதுதவிரவும், தங்களின் பிழைகளை இலகுவாக மற்றவர்களின் மீது சுமத்திவிட்டு விலகிவிட நினைக்கின்றனர். அந்த ஊக்க மருத்துவரின் சிகிச்கையின் பலனாக மாட்டிக்கொண்டுள்ள உபுல் தரங்கவின் கிரிக்கட் எதிர்காலம் எப்படியிருக்கும், அத்துடன் தங்களை நோக்கி வீசப்பட்ட பந்தை சங்காவின் பக்கம் திருப்பிவிட்டு தப்பிக்க நினைக்கின்றனர் சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரிகள். அதுவும், அவர்கள் ஊடகவியலாளர் மாநாடுகளில் வழங்குகின்ற பதில்கள் சிறுபிள்ளைத் தனமானதாகவே இருக்கின்றது. அணித்தலைவர் கோரியதால் நாங்கள் வழங்கினோம் என்றால் ஏன் நிர்வாகிகள்?! அதுதவிரவும், எதிர்வரும் இரண்டு வருடங்கள் புதிய வீரர்களைக் கொண்டு இலங்கை கிரிக்கட் அணி மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது. “மச்வின்னர்“ முரளி இல்லாத இடத்தில் புதிய வீரர்கள் தேவைப்படுகின்றார்கள். அதுதவிரவும், சங்கா, மஹெல, மலிங்க இல்லாத இலங்கை அணி இரண்டாம் தர அணியாகவே இருக்கும். விரும்பியோ- விரும்பாவிட்டாலோ மூவரும் அணியினை விட்டு விலகும் காலம் நெருங்கிவிட்டதாக தெரிகிறது. புதிய வீரர்களை நம்பிக்கையுடன் ஆட அனுமதியுங்கள். மீண்டும் முரளியும்- சங்காங்களும் கிடைப்பார்கள். 
பிரபாகரனின்
தொலைந்த காதலியைத் தேடி: IN THE CITY OF SYLVIA.
Posted On Tuesday, June 21, 2011 at at 10:31 AM by மருதமூரான்.அதுபோல, சில படங்கள் எம்முடைய மனதை சலனங்கள் இன்றி சீர்படுத்தவும் செய்கின்றன. அதற்கு அண்மையில் பார்த்த IN THE CITY OF SYLVIA நல்லதொரு உதாரணம். படமென்றால், சிரிப்பும், அதிரடியும், பாட்டும், சென்டிமென்டும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் சிறிதும் பொருத்தமில்லாதது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தேடல்கள் உண்டு. அதுபோல ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதுக்கும் தேடல்கள் உண்டு. ஆழ்மன தேடல்கள் குறித்து 95 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. அவற்றை தேடி செல்கின்றவர்களை துறவிகள், சாமிகள், சித்தர்கள், நாடோடிகள், கிறுக்கர்கள், பைத்தியக்காரர்கள் என்றெல்லாம் அழைக்க கேட்டிருக்கிறோம். அவ்வாறான ஆழ்மன தேடல்கள் கொண்ட இளைஞன் ஒருவரின் தேடலே ‘IN THE CITY OF SYLVIA’.
ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்த (அழகிய) பெண்ணை தேடி ஓர் ஓவியத் திறைமை கொண்ட இளைஞன் இத்தாலியின் சில்வியா நகருக்கு செல்கின்றான். அவனுடைய மூன்று நாள் வாழ்க்கையே ‘IN THE CITY OF SYLVIA'. ஸ்பானிய மொழி திரைப்படம். 2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தினை திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான
சில்வியா நகரிலுள்ள உணவு விடுதியொன்றின் வாடிக்கையாளர்களும், பராமரிப்பு பெண்ணும், வீதிகளும், தொடரூந்தும், ஓவியனும், அழகிய சில பெண்களுமே படத்தின் கதாபாத்திரங்கள். 84 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்தப்படத்தினை பார்ப்பதுக்கொண்டிருந்த எனக்கு தியானத்தில் இருந்த உணர்வு ஏற்பட்டது.
பெயர், முகவரி தெரியாத, அதுவும் ஆறு வருடங்களுக்கு முன்னர் ஓர் கண்காட்சியில் சந்தித்து உரையாடிய பெண்ணைத் தேடி எந்தவொரு தகவலும் இல்லாமல் ஒரு பெரிய நகரத்துக்கு செல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்த விடயத்தில் ஆத்மார்த்தமாக செயற்படுகின்றான் அந்த ஓவிய இளைஞன். அவனின் தேடல் முடிந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு வார்த்தைகளின், வசனங்களின், பேரிரைச்சல்களின் அலட்டல் இன்றி விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தினை தனியையில் எந்தவொரு இடையூறுகளுமின்றி பார்க்கிறபோது வானத்தில் மிதக்கின்ற மாதிரியாக, மனது லேசானதான உணரமுடிந்தது.
ரயிலிலோ, பஸ்சிலோ பயணிக்கின்ற போது எத்தனை நபர்களை (குறிப்பாக இங்கு இளம் பெண்கள் என்று பொருத்தி பார்க்கவும்) பார்க்கின்றோம். அவர்களில் சிலரை ஏற்கனவே பார்த்தது போல உணர்வோம். அவர்களிடம் சென்று பேசலாமா வேண்டாமா என்று எல்லாம் மனதில் கேள்விகள் எழும். ஆனாலும், அதிகமானோர் அவர்களிடம் பேசுவதில்லை.
பயணத்தை முடித்து நடக்கையில் யார் அவர்? பேசியிருக்கலாமோ? என்ற கேள்விகள் தொக்கி நீக்கும். மீண்டும் எமது வேலைகளில் மூழ்கும் போது அவை மறந்து போகும். இவ்வாறே பெரும்பாலானோரின் வாழ்க்கை செல்கிறது. அந்த அச்சவுணர்வை நீக்கி தைரியமாக பேசியிருக்கும் சந்தர்ப்பந்தில் சில வேளைகளில் எமது வாழ்க்கை பயணத்தில் மாற்றங்கள் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கும்.
இதுவொரு உதாரணம் மட்டுமே…! வாழ்க்கையின் மாற்றங்களை புறச்சூழல் மாத்திரமின்றி, சில தருணங்களில் ஆழ்மன தேடல்களும் தீர்மானிக்கின்றன. நிகழ்வுகளின் சடுதியான மாற்றங்கள் தானோ வாழ்க்கை!!
(2009 ஆகஸ்ட் 11ம் திகதி எழுதியது, சில திருத்தங்களுடன் மீள்பதிவாக)
புலத்திலிருக்கும் தமிழன்: முதல் ஹீரோ: இலங்கை அப்பாக்களுக்கு!
Posted On Monday, June 20, 2011 at at 11:58 AM by மருதமூரான்.புலத்திலிருக்கும் தமிழன்!

விரும்பியோ விரும்பாமலோ சில விடயங்களை பேசவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. தமிழ் மக்களின் (ஆயுத) விடுதலைப் போராட்டம் வானளவில் வளர்ந்து, முள்ளிவாய்க்கால் கடலுக்கடியில் மக்கி மண்ணாகிப் போனமை வரை புலம்பெயர்ந்த தமிழனின் பங்கு முக்கியமானது. ஈழத்தமிழனின் வரலாறு எழுதப்படும் போது, புலம்பெயர் சமூகம் பெரிய அத்தியாயத்தைப் பிடித்துக்கொள்ளும்.
உடலை வருத்துகின்ற குளிர்நாடுகளின் விடுதிகளில் உணவு பரிமாறியும், தட்டுக்கழுவியும் சம்பாதித்த பணத்தின் குறிப்பிட்ட பகுதியை ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் அநேகர் ஏதோவொரு நம்பிக்கையில் விடுதலைப் போராட்டத்திற்கு என்று கோராப்பட்ட போதெல்லாம் வழங்கியிருக்கின்றனர். அது, இன்றும் சில நாடுகளில் தொடர்கிறது.
புலத்திலிருக்கும் உறவுகளை நோக்கி ஒரு சில கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்க முடியும். ஏனெனில், விடுதலைப் போராட்டத்துக்கு என்று வசூலிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி ‘கறுப்பாடு’களின் வங்கிக்கணக்குகளில் உறங்குகிறது. அதுதவிரவும், வடக்கு- கிழக்கிலிருக்கின்ற மக்களுக்கு என்று கோராப்படுகின்ற பணத்தை கொண்டு உதவி வழங்கும் நிறுவனங்கள் கூட, பெரியளவில் ஒன்றும் செய்துவிட முடியாத நிலையே இங்கு இருக்கின்றது. ஆட்சியாளர்களும் அதனை விரும்பவில்லை.
மோதல்களின் முழுமையான வலிகளையும் வாங்கியிருக்கும் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக புலத்திலிருக்கின்ற உறவுகள் உதவி வழங்க விரும்பினால், தனிப்பட்ட ரீதியில் உதவுகள். அதாவது, பொருளாதார வசதியற்ற ஒரு மாணவனின் கல்விச் செலவுகளை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். மாதாமாதம் அதற்கு பெரிய தொகையும் தேவைப்படாது. அல்லது, தொழில் முயற்சிகளுக்கு உதவுங்கள். இவ்வாறான உதவிகள் வன்னிக்குள்ளும்- கிழக்கிலும் தேவைப்படுகின்றன.
அதுதவிரவும், முன்னாள் போராளிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னகர்த்துவதற்கும் உதவலாம். ஒருகாலத்தில் ஹீரோக்களாக கருதப்பட்ட அவர்கள், தற்போது அதே சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற சூழ்நிலையே அதிகம் காணப்படுகின்றது. நான் எப்போதும் வேண்டுவது, உதவிகளைச் செய்யக்கூடிய நிலையிலிருக்கின்ற புலம்பெயர் உறவுகள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படுங்கள். அதுவே, அனைவருக்கும் நல்லது!
முதல் ஹீரோ!

என் ஆளுமையில் மட்டுமல்ல, உடல்மொழியிலும் தாக்கம் செலுத்துகின்ற அப்பாவுக்கு….! முதன்முதலில்; தோளில் அமரவைத்து உலகத்தை காட்டிய, கைபிடித்து கதைபேசிய நண்பன்- ஹீரோ எல்லாமே நீங்கள் தான்! நல்ல அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள்!! இது, தந்தையர் தினத்தை முன்னிட்டு பேஸ்புக்கில் நேற்று நான் இட்ட கருத்துரையின் திருத்திய வடிவம்.
அன்னையர்தினம், தந்தையர்தினம், காதலர் தினம் என்று ஆயிரத்தெட்டு தினங்களை வருடம் முழுவதிலும் கொண்டாடுகின்றனர். இதில், பல வியாபார நோக்கங்களுக்காகவே கொண்டாடப்படுகின்றன. ஆனாலும், விரைவான உலகில் இவ்வாறான சில தினங்கள் எங்களை ஏதோவொரு தருணத்தில் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
ஆண்- பெண் என்று வித்தியாசமின்றி பிள்ளைகளில் 90 வீதமானோர் தங்களின் தாய்மாருடனேயே விருப்பு- வெறுப்புக்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றனர். ஆனாலும், பிள்ளைகளின் வளர்ச்சியிலும், ஆளுமையிலும் அன்னைக்கு ஈடாக தந்தையரும் தாக்கம் செலுத்தியே வருகின்றனர். எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என்னுடைய தந்தையாரே பல விடயங்களின் எனக்கு முன்னுதாரணமா இருக்கின்றார்.
தந்தை- மகன் உறவைத் தாண்டி நண்பனாக பல விடயங்களை விவாதிக்கவும், மனம் விட்டு பேசிக்கொள்ளவும் முடிகிறது. தொழில் நிமிர்த்தம் கடந்த பத்து ஆண்டுகளாக அவர் வெளிநாடொன்றில் இருக்கின்றார். வாரத்தில் இருதடவைகளாவது பேசிக்கொள்வோம். அந்தப் பேச்சுக்களில் குடும்ப விசயங்கள் பெறும் முக்கியத்துவத்தை- பொது விடயங்களும் பெற்றுக்கொள்கின்றன.
அவரிடத்திலுள்ள சில குறைபாடுகளை நேரடியாக சுட்டிக்காட்டினாலும், சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளுவார். இங்கே அப்பா- மகன் என்ற ஈகோவும் வருவதில்லை. அதனாலேயே, பலருடன் ஈகோ என்கிற உணர்வைத் தாண்டி பழக முடிகிறது. மிஸ்டர் தங்கமயில் கந்தையா..! நீங்கள் என்னுடைய ஹீரோ!. அதுதவிரவும், நல்ல தந்தையாக எதிர்காலத்தில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் நீங்கள்தான் முன்னுதாரணம்.
நேற்றைய தந்தையர் தினத்தில் என்னை மிகவும் பாதித்த பதிவொன்றை நண்பர் அனுதினன், ‘இலங்கை அப்பாக்களுக்கு!!” என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பதிவை, வாசித்த பின்னர் அனுதினனின் தந்தையை தாண்டி, தாயாரே அதிகம் ஞாபகத்துக்கு வந்தார். கலகலவென்று பேசும் அந்த தாயின் கையினால் சாப்பிட்டிருக்கிறேன். அந்த கலகலப்புக்குப் பின்னால், பயங்கர வலியிருக்கிறது. அனுதினனும்- அம்மாவும் ஈழத்திலிருக்கிற உறவிழந்த ஆயிரக்கணக்கானோருக்கு சாட்சி!!






