புள்ளத்தாச்சிக்கு பஸ்ஸில் சீட் குடுப்பது தப்பா?!
Posted On Friday, January 28, 2011 at at 12:55 PM by மருதமூரான்.ஜனவரி 24ஆம் திகதி காலை 8.00 மணி, மொரட்டுவை – புறக்கோட்டை வழி. பஸ் நிரம்பியிருந்தது. வேலைக்கு செல்பவர்கள் அதிகம். நானும் கல்சிசையில் பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் அதிகமென்பதால் நின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டியிருந்தது. கல்சிசை தாண்டி தெஹிவளை சந்திக்கு முதல் பஸ் நிறுத்தத்தில் ஒரு பெண் பஸ்ஸினுள் ஏறினாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் சீட்டிலிருந்த ஒரு இளைஞன் எழும்பி அவளுக்கு உட்காருவதற்கு இடம் கொடுத்தான். காரணம் அவள் கர்ப்பவதி.
ஆனால், அந்தப் பெண் சீட்டில் உட்காரவில்லை. மாறாக அந்த இளைஞனை ஏதோ சொல்லி சிங்களத்தில் திட்டிக்கொண்டிருந்தாள். எனக்கு விளங்கியவரை தன்னை அந்த இளைஞன் கேலி செய்வதாகக் கூறியே அவள் திட்டிக்கொண்டிருந்தாள். பாவம் அந்த இளைஞன் ஒன்றும் பேசாமல் சற்று விலகி நின்றுகொண்டான். அடுத்த பஸ் தரிப்பில் இறங்கியும் சென்று விட்டான்.
இவற்றை ஆரம்பம் முதலே பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் குறித்த பெண் கர்ப்பவதி மாதிரியே தெரிந்தாள். அவள் அணிந்திருந்த ஆடையும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கர்ப்ப கால பெண்கள் அணியும் ஆடை மாதிரியே இருந்தது. ஆனாலும், அவள் கர்ப்பவதி இல்லையாம். அவளுடைய தொப்பை சற்று பெரிதாக காணப்பட்டதை கண்டு கர்ப்பவதி என்று நினைத்து சீட் கொடுத்த இளைஞன் திட்டு வாங்கியதுதான் மிச்சம். அதேவேளை, தன்னை அவமானப்படுத்தி விட்டதாக அந்தப் பெண்ணும் பொருமிக்கொண்டிருந்தாள். பஸ்ஸினுள் இருந்த பலர் இதனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.
பஸ்ஸில் பயணப்படும் போது பல சுவாரஸ்யங்களைக் கண்டுகொள்ள முடியும். அதுவும், கொழும்பு நகரத்துக்குள் ஓடும் பஸ்களில் சொல்லிமாளாது. நடத்துனருக்கும் பயணிகளுக்குமான கொடுக்கல்- வாங்கல் சச்சரவுகள், பஸ்களுக்கிடையிலான போட்டி ஓட்டம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்று கொட்டாவி விடுவது, காதலர்களின் ரொமான்ஸ், பயணிகளுக்கிடையிலான இருக்கை சண்டை, காமுகர்களின் கச்சடாதனம் இப்படி ஏராளம். ஆனாலும், அவ்வப்போது மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரப்படும் இப்படியான குளறுபடிகளும் நடந்து விடுகின்றன.
கொழும்புக்கு வந்த புதிதில் நடுத்தரவயதுப் பெண்ணெருவருக்கு சீட் கொடுக்கப்போய் அந்தப் பெண் என்னை எரிந்து விழுவதுபோல பார்த்தது எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. அன்று முழுவதும் நண்பர்கள் அடித்த கிண்டல் இருக்கிறதே அப்பாடா….! அன்றிலிருந்து சிறுவர்கள், வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பவதிகள் தவிர யாருக்கும் சீட் கொடுப்பதில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. கவனம் யாராவது பஸ்ஸில் சீட் கொடுப்பதற்கு முன்னர் ஆராய்ந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கும் திட்டு விழலாம்!!.
ருசியுள்ள எங்கட ஊர் (இ)றால் பொரியல்.
Posted On Monday, January 24, 2011 at at 11:18 AM by மருதமூரான்.எங்கட ஊர்ப்பக்கம் காரசாரமான சாப்பாடுகள் அதிகம். அதுவும், யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் எண்டாலே புது ருசிதான்.
சிறிசுகளிலிருந்து பெரிசுகள் வரை விரும்பிச்சாப்பிடுற இறால் பொரியல் செய்யிறது எப்பிடியெண்டு இண்டைக்கு பார்ப்பம். நான் சாப்பிடுறதுக்கு பின்னிக்கிறது இல்ல. அதுவும் ருசியுள்ள சாப்பாடு எண்டால் சொல்ல வேண்டுமோ…! சரி வாங்கோ இறாலை பொரிப்பம்.
முதலில், அரைக்கிலோ பெரிய இறால் வேண்டிக்கொள்ளுங்கோ. இப்பத்தான் யாழ்ப்பாணத்திலையும், முல்லைத்தீவிலையும் அதிகமாக இறால் பிடிபடுற காலமென்டு நினைக்கிறன். மலிவாவும் இருக்கும்.
தேங்காயெண்ணை இல்லாட்டி நல்லெண்ணையும் வாங்கிக்கொள்ளுங்கோ. தேங்காயெண்ணையில கொழும்பு அதிகம். அதையும் கவனத்தில கொள்ள வேணும்.
முக்கியமாக யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள். மிளகாய், மல்லி சரிக்கு சரியா போட்டு சீரகம், வெந்தயம் எல்லாம் போட்டு நல்ல வறுத்து அரைச்சு வைச்சிருப்பீங்கள் தானே.
மற்றது எங்கட ஊர் சின்ன வெங்காயம் கொஞ்சம். பச்சை மிளகாய். கருவேப்பிலை. உப்பு.
செய்முறை
வேண்டி வச்சிருக்கிற இறாலை நல்ல வடிவா தோலை கழட்டி கழுவிக்கொள்ளுங்கோ. அதுவும், இறாலின்ர முதுகுப்பக்கத்தில கறுப்பு கலரில இருக்கிற பகுதியை அகற்றி விடுங்கோ. இல்லாட்டி தேவையில்லாத நோய் எல்லாம் வந்து சேரும். குறிப்பா வாந்திபேதி.
கழுவி வச்சிருக்கிற இறாலை கொஞ்சம் மிளகாய்த்தூள், உப்பு தேசிப்புளி விட்டு பிரட்டிக் கொள்ளுங்கோ. வேணுமெண்டால் அரைச்ச உள்ளியும் (பூண்டு) சேர்த்துக்கொள்ளலாம்.
எரியிற அடுப்பில தாச்சியை வைச்சு எண்ணையை உத்திங்கொள்ளுங்கோ. எண்ணை சூடானதும் அதில மிளகாய்த்தூளுடன் பிரட்டி வச்சிருக்கிற இறாலை போட்டு அரைப் பதம் வேகுற வரைக்கும் பொரியுங்கோ.
அதுக்கு பிறகு வெட்டி வச்சிருக்கிற வெங்காயம், பாதி பிளந்த இரண்டு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை எல்லாத்தையும் பொரிஞ்சுகொண்டிருக்கிற இறாலோட சேர்த்துக் கொள்ளுங்கோ. நல்ல பதமா பொரிஞ்சு வந்தாபிறகு இறக்கிகொள்ளுங்கோ.
நாட்டரிசி சோத்தோட கத்தரிக்காய் குழம்பும், இறால் பொரியலும் சேர்த்து சாப்பிட்ட என்ன ருசியெண்டு தெரியுமே…..! இப்ப புறோன்ஸ் பிறை, சிக்கின் பிறை எண்டு கொழும்பில கணக்க காசு குடுத்து ஏசிக்குள்ள இருந்து வாங்கிச் சாப்பிட்டாலும், எங்கட ஊரில அம்மாவின்ர கையால சமைச்ச இறால் பொரியல் சாப்பிட்ட ருசி வரமாட்டன் என்கிறது.
(2011இல் இரண்டாவது பதிவு: அப்பாடா நானும் பதிவர் தான் என்கிறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு.)

அறிவுஜீவி கமலின் ‘மன்மதன்அம்பு’ மற்றும் மட்டக்களப்பு.
Posted On Wednesday, January 12, 2011 at at 9:05 AM by மருதமூரான்.இந்தியச்சினிமாவில் அறிவுஜீவி (?) நடிகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களில் நாத்தீகம் பேசுகின்ற பகுத்தறிவாளர் கமல்ஹாசன் முக்கியமானவர். உலக அரசியலிருந்து, பொருளாதாரம் ஈறாக தீவிரவாதம் வரை தன்னுடைய சினிமாக்களினூடு பேசுபவர். அத்துடன், நான் விரும்புகின்ற முத்தங்களையும் சினிமாவில் பொழிபவர்.
கமல்ஹாசனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கின்ற ‘மன்மதன்அம்பு’ படத்தினை சிலநாட்களுக்கு முன்னர் பார்த்தேன். படம் ஆரம்பமாகி சிறுதருணத்திலேயே இடம்பெறும் ‘உய்ய உய்ய உய்யால..’ பாடலின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. படமும் பரவாயில்லை. ஆனாலும், படத்துடன் ஒன்றிக்க முடியவில்லை.
முதலாவது காரணம், புலம்பெயர் இலங்கைத் தமிழரின் பாத்திரப்படைப்பு. படைப்பாளிகளுக்கு இருக்கின்ற சுதந்திரத்தில் தலையிடுவது தவறுதான். ஆனாலும், படைப்பாளிகளுக்கு சமூக அக்கறை இருக்கவேண்டும். அதுவும், தன்னை அறிவுஜீவியாக காட்டிக்கொள்கின்ற கமல்ஹாசனுக்கு அதுகொஞ்சம் அதிகமாகவே இருக்க வேண்டும். அதனை, அவர் கைக்கொள்ளவில்லை.
திரிஸாவின் செருப்பாக நடிக்கவே தயார் என்று கூறும் அந்தப் பாத்திரத்தினூடு புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் மீதான அதீத எள்ளல் கையாளப்பட்டிருக்கின்றது. அதனை (இலங்கைத் தமிழனான) என்னால் இரசிக்க முடியவில்லை. சினம்கொள்ளவே முடிந்தது. இதனை மற்ற இலங்கை தமிழர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியாது. ஆனாலும், தன்னை சமூக அக்கறையாளனாக காட்டிக்கொள்ளும் கமலிடம் எதிர்பார்க்கவில்லை.
நடிகர் கமல்ஹாசனிடம் இருக்கின்ற ஒருகுறை தன்னுடைய கொள்கையை அல்லது எண்ணங்களை மக்களிடம் வலிந்து திணிப்பது. மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பது தவறல்ல. ஆனால், அதனை ஓரளவுக்கு மீறி திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக வரையறை, பண்பாடு உள்ளிட்டவற்றின் மீது சடுதியாக கேள்வியெழுப்பி மாற்றிப்போட்டுவிட முடியாது. அது சீரான மாற்றத்தினூடே நடைபெற வேண்டும்.
இவை, தவிரவும் மற்றவர்களின் நம்பிக்கையின் மீது அதீதமாக கேள்வி எழுப்புவது சில தருணங்களில் சில சமூகத்தையே சினம்கொள்ள வைக்கின்றது. ‘மன்மதன்அம்பு’ படத்தின் வசனங்களில் கமல்ஹாசன் என்கிற அறிவுஜீவி அளவுக்கு அதிகமாக தாக்கம் செலுத்துகின்றார். அது, பல இடங்களில் பொருத்திப் போகவில்லை. அதுதவிரவும், அவருடைய சினிமாக்களிலோ, பேச்சுக்களின் போதோ தீவிரவாத அல்லது போராட்டவியல் தத்துவங்கள் பல தருணங்களில் முரண்பட்டுக்கொள்கின்றன. அதனையும் அவர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்தியச் சினிமாவிலேயே தவிர்க்க முடியாத கமல்ஹாசன், பரீட்சார்த்த முயற்சிகளை தன்னுடைய சினிமாக்களினூடு செய்கின்ற கமல்ஹாசன் விமர்சனங்களை சரியாக உள்வாங்குபவர். ஆனாலும், சில முரண்கள் தொடர்கின்றன. அதனைதான் புரிந்துகொள்ள முடியவில்லை. நேர்மையானவர்களுக்கு திமிர்தான் வேலி என்று சொல்கின்ற கமல்ஹாசனுக்கும் திமிர் இருக்கவேண்டுமோ என்னவோ!!!
இயற்கையின் சீற்றங்களுக்கு முகம்கொடுக்கின்ற மட்டக்களப்பு.
இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ்- முஸ்லிம் மக்களின் பூர்வீக பூமி. 1960களின் பின்னர் சிங்கள மக்களினதும் பூர்வீக (?) பூமியாகிவிட்டது. இயற்கையிலேயே வளங்கள் நிறைந்த பூமி. ஆனாலும், அவ்வப்போது இயற்கையின் சீற்றத்துக்கு முகம்கொடுத்து வருகிறது.
முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வந்த மோதல்களில் பாரிய வடுக்களை வாங்கி நிற்கின்ற கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மக்களுக்கு மீண்டும் மழை, வெள்ளம் என்கிற வடிவில் இயற்கை தன்னுடைய சீற்றத்தை காட்டி அல்லல்களை வழங்கியிருக்கின்றது.
1957ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளம், 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்குப் பின்னர் 2011இல் மீண்டுமொரு பாரிய வெள்ளம். மட்டக்களப்பு மாவட்ட மக்களில் சுமார் 90 வீதமானவர்களை சிரமங்களுக்கு முகங்கொடுக்க வைத்துள்ளது.
இடப்பெயர்வுகள் எம்முடைய மக்களுக்குப் பழக்கப்பட்டதுதான், ஆனாலும், தொடர்ந்தும் அவை ஏற்படுவது வருத்தத்தை கொடுக்கின்றது. வெள்ளம் இன்னும் வடிந்தோட ஆரம்பிக்கவில்லை. தொற்று நோய்கள் மக்களிடம் வேகமாகப் பரவும் சூழல் அதிகரித்துள்ளது. உலர் உணவுகள், குடிதண்ணீர், மருந்துப்பொருட்கள் மற்றும் போர்வைதுணிகள் மக்களுக்கு தேவைப்படுகின்றன. வசதியுள்ளவர்களும், கொடையாளிகளும் அவற்றை வழங்கி உதவுங்கள். அது, சிறு நம்பிக்கையையும், நிம்மதியையும் மக்களுக்கு வழங்கும்.
இலங்கையில் தொடருக்கின்ற மழையினால் மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள மற்றும் மண்சரிவு ஆபாயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு, மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திருநாளான தைப்பொங்கல் எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் எம்முடைய மக்களில் பெருமளவானோர் இடப்பெயர்வுகளைச் சந்தித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டில் முதலாவது பதிவு சிறிய சினத்துடனும், பலத்த வருத்தத்துடனும் எழுதவேண்டி ஏற்பட்டுள்ளது. மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம் உறவுகளே….!