பாலியல் தொழில்: சுகத்தை விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்கு…!
Posted On Sunday, December 19, 2010 at at 6:27 PM by மருதமூரான்.“எங்கள் நாட்டின் இளம் பெண்களே, பாலியல் தொழிலை கௌரவ குறைவாக நினைக்காதீர்கள். நீங்கள்தான் எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு” என்கிறது தாய்லாந்து அரசு. “விபச்சாரம் கலாச்சாரத்தை சீரழிக்கிறது. ஆகவே அது முற்றுமுழுதாக தடுக்கப்பட வேண்டும்” என்கிறார்கள் இலங்கை, இந்திய கலாச்சார ஆர்வலர்கள். “பாலியல் தொழில் சட்டபூர்வமானது” என்கின்றன மேற்குலகின் நாடுகள் பல. இவ்வாறு மனித இனத்தில் முதல் தொழிலான பாலியல் தொழிலுக்கு அங்கீகாரங்களும், அனுமதி மறுப்புக்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பாலியல் தொழில் அல்லது விபச்சாரம் (இந்த வார்த்தை பிரயோகத்தில் எனக்கு உடன்பாடு இல்லை) என்று ஊடகங்களாலும், தகவல் பரிமாற்ற கருவிகளாலும் தொடர்ந்தும் முதன்மைப்படுத்தப்படும் இந்த விடயங்களைக் கொண்டு மக்களிடம் ‘பாலியல் தொழில்’ குறித்து அறிந்து கொள்வதிலுள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பாலியல் தொழில் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் நடிகை புவனேஸ்வரி கைதுசெய்யப்பட்டார். குறித்த செய்திகளே தமிழகத்தின் முன்னணி ஊடகங்களினால் இரண்டு, மூன்று தினங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. அந்த செய்தியின் தொடர்ச்சி இன்னும் முடிந்துவிடவில்லை.
கடந்த வருடம் மகளிர் விழிப்புணர்வு சஞ்சிகையில் வெளியாகியிருந்த பாலியல் தொழில் சம்பந்தமான கட்டுரையை வாசித்திருந்தேன். அந்த கட்டுரையாசிரியர் இலங்கையின் பல இடங்களில் பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் ஆய்வுகளை செய்தே அதனை எழுதியிருந்தார். அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டினால் பொருத்தமாக இருக்கும். “பாலியல் தொழிலில் ஈடுபடும் சாதாரண பெண்களே அதிகம் தண்டிக்கவும், வஞ்சிக்கவும் படுகிறார்கள். அவர்களுக்கு என்று இருக்கின்ற மனிதம் எந்த தருணத்திலும் மதிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களின் திருப்திக்காக உழைக்கும் இவர்கள் விபச்சாரி, விலைமாது என்கின்ற பெயர்களில் அனேகரால் அழைக்கப்படுகின்றனர். அதே, பாலியல் தொழிலில் ஈடுபடும் மேல்தட்டு பெண்கள் (இதில், நடிகைகள் உள்ளிட்ட பிரபலமானவர்களும் அடக்கம்) அதிக பணத்துடன் அதிகார செல்வாக்கையும் பெற்றுக்கொண்டு மேதாவிகளாக வலம் வருகிறார்கள், இவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவு. இவர்கள் சில தருணங்களின் சமூகத்தில் மிகவும் அந்தஸ்துடனும் வைத்து பார்க்கப்படுகிறார்கள்”. பாலியல் தொழில் இரண்டு தளங்களில் பயணிக்கின்றது. அல்லது நடைபெறுகின்றது. அந்தந்த தளங்களில் அவர்களின் நிலை தீர்மானிக்கவும் படுகிறது. (பாலியல் தொழிலில் ஆண்களும் அனேக அளவில் ஈடுபடுகிறார்கள்)
இந்தியா, இலங்கை உள்ளிட்ட கலாச்சாரமும், குடும்ப நிலையும் அதிகமாக இறுக்கமாகவுள்ள நாடுகளிலேயே சிறுவர் துஸ்பிரயோகங்களும், பாலியஸ் துஸ்பிரயோகங்களும் அதிகரித்து செல்கின்றன. இவற்றுக்கு என்ன காரணம் என்று சொல்வது. மேற்குலகில் கற்பழிப்புக்களும், சிறுவர் துஸ்பிரயோகங்களும் அதிகரித்து செல்லமாமைக்கு பாலியல் தொழிலின் அங்கீகரமும் ஒரு காரணம். இந்தியாவில் மாநிலங்களுக்குள்ளேயே பாலியல் தொழிலுக்கு அங்கீகாரங்களும், அங்கீகார மறுப்புக்களும் கண்கூடு. கொல்கொத்தாவின் சோனாக்காச்சியும், மும்பையின் தாராவியும் பாலியல் தொழில் கொழிக்கும் இடங்கள். இந்த பகுதிகளில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக அனேக தருணங்களில் பார்க்கப்படுவதே இல்லை. இவ்வாறு ஒரு ஜனநாயக நாட்டுக்குள்ளேயே பாலியல் தொழில் குறித்து வாதப்பிரதி வாதங்கள் முடிவுறவில்லை.
ஐ.போன்களைத் தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டு செயற்கைப்பஞ்சத்துடனேயே ஐ.போன்களை விற்பனைக்கு விடுமாம். அதேபோலவே, பாலியல் தொழிலும் சில தருணங்களில் செயற்கை பஞ்சம் உருவாக்கப்பட்டு அதிக விற்பனைக்கு தூண்டப்படுகிறது. இதற்கு அந்த தொழிலிலுள்ள வருமானமே முக்கிய காரணம். பாலியல் தேவைகளுக்காக ஆண்களும், பெண்களும் தற்போதைய காலகட்டத்தில் மிக இயல்பாகவே தொழில் புரிவோரை நாடிச் செல்கின்றனர். இந்த நிலைகள் அனைத்து மக்கள் சமூகத்திலும் அதிகரித்துள்ளது. இவற்றை கலாசார காவல்களும், குடும்ப வளையங்களும் அதிகளவில் கட்டுப்படுத்த முடிவதில்லை.
புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலியல் தொழில் புரிந்த பீலி (குறித்த பெயர் சரியென்றே நினைக்கிறேன்), இந்து மதத்தின் பெயரால் அதனை நடத்தியவர்கள் கொண்டுவந்த தாசி முறை, மனித இனத்தில் முதல் மனிதனே தன்னுடைய மகள்களை புணர்ந்தமை என்று பல இடங்களில் பல வடிவங்களில் பாலியல் தொழில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு ஆண்களின் (பெண்களின்) தேவைகளும், புதிய புதிய ஈர்ப்புக்களுமே காரணம். இதனை பயன்படுத்தி பலர் பணம் பண்ணுகிறார்கள். பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவது என்பது எந்தக்காலத்திலும் சாத்தியமில்லாதது. ஏனென்றால் அது ஒவ்வொரு மனிதனின் சுய தேவை, உணர்வு, மனநிலை, கட்டுப்பாடு என்று பல விடயங்கள் சம்பந்தப்பட்டது.
மக்களின் முன்னால் ஏக பத்தினி விரதனாக காட்டப்படுபவர்கள் பலரின் மறுபக்கங்கள் பாரிய வக்கிரங்களையும், பாலியல் வன்மங்களையும் கொண்டதாக இருக்கும். அதனை பல தருணங்களில் நாம் அறிந்துமுள்ளோம். அதுபோலவே பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களில் பலர் மனிதநேயத்தை மதிப்பவர்களாக, மனித உணர்வுகளை புரிந்து கொள்பவராக இருப்பதையும் நாம் பார்த்துள்ளோம். பாலியல் தொழிலின் வருகை நல்லவற்றையும், கெட்டவற்றையும் சமஅளவில் கொண்டு செல்கிறது. அது குறித்து ஆராய்வது இந்தக்கட்டுரையில் நோக்கமல்ல. பாலியல் தொழிலின் தோற்றத்துக்கு பலரும் காலத்தை வேண்டுமானல் கண்டுபிடிக்கலாம்… ஆனால், அதற்கான முடிவு எந்தக்காலத்திலும் சாத்தியமற்றது.
(ஊடக நண்பர் ஒருவருடனான இன்றைய சந்திப்பின் போது இலங்கையில் பாலியல் தொழிலாளிகள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அந்த தாக்கத்தினால், 2009 ஒகஸ்ட் 6ஆம் திகதி என்னால் எழுதப்பட்டு பதிவேற்றப்பட்ட இந்தப் பதிவை, மீள்பதிவாக இடுகிறேன்.)

என்னைக் கவர்ந்த, ‘மந்திரவாதி’ ரஜினியின் 10 படங்கள்.
Posted On Friday, December 17, 2010 at at 6:10 PM by மருதமூரான்.நேரம் கிடைக்கிறதோ இல்லையோ எப்படியாவது அதிக படங்களைப் பார்த்துவிடுகிறேன். அதுவும், தமிழ்- ஹிந்திப் படங்களில் நல்லது கெட்டது என்று பார்ப்பதில்லை. அதிகமானவற்றை பார்க்கிறேன். குறிப்பிட்டளவு வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கிறேன்.
நேற்று இரவுகூட ஜெய் நடித்த ‘கனிமொழி’ படம் பார்த்து அழுதுவிட்டுப் படுத்தேன். ஏன் இவ்வாறான கதையையெல்லாம் தேர்ந்தெடுத்து எங்களின் கழுத்தை அறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. படத்தை இயக்கிய சிறிபதி ரங்கசாமி அதிஸ்டக்காரர். இவ்வளவு மொக்கையான கதையை படமாக எடுக்க தயாரிப்பாளர்(கள்) கிடைத்திருக்கிறாரே. அதைவிட கொடுமை என்னவென்றால் என்ன தைரியத்தில் இந்தப்படத்தில் நடிக்க ஜெய்- விஜய் வசந்த் சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை.
அடடா……….! ரஜினி என்கிற மந்திரவாதி நடிகரின் படங்களைப் பற்றி எழுதவேண்டிய பதிவில் நான் பட்ட துன்பங்களையெல்லாம் எழுதி தொலைக்கிறேனே…..! என்னை தொடர்பதிவுக்கு அழைத்த கூல் கிருத்திகனுக்கு நன்றி. (எப்படியாவது என்னை பதிவு எழுதவைத்துவிட வேண்டும் என்கிற உங்களின் கடமை உணர்வை மதிக்கிறேன்.)
நான் கமல் ரசிகனோ, ரஜினி ரசிகனோ கிடையாது. அதுபோல, அஜித்- விஜய் ரசிகனோ கிடையாது. என்ன படம் எனக்கு பிடித்திருக்கிறதோ அதனை ரசிக்கிறேன். ஆனாலும், ரஜினி என்கிற சொல்லுக்கு மற்ற நடிகர்களை விட அதிகளவான கவரும் சக்தி இருக்கிறது என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தளவில் சின்னக் கண்களையுடைய ‘கறுப்பு மந்திரவாதி’ ரஜினி. மூன்று தசாப்தங்களைத் தாண்டியும் மொழி பாகுபாடின்றி ரசிகர்களை கட்டிவைக்க ரஜினியினால் முடிகிறது. தன்னை மிகப்பெரும் வியாபாரமுள்ள நடிகராக மாற்றிக் கொண்டாலும் அவரின் நடிப்பு ஆளுமை சில காட்சிகளில்- கணங்களிலேயே வெளிப்பட்டு எம்மை ஆட்கொண்டிருக்கிறது.
அதற்கு அண்மைய உதாரணம் எந்திரனில் சிட்டி ரஜினி வில்லனாக உருமாறி கண்ணாடியின் முன் தன்னைப் பார்க்கும் காட்சி. இப்பொழுதும் அந்த பாத்திரத்தில் என்னால் வேறு ஒருவரைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதுகூட ரஜினியின் வெற்றிதான். சரி என்னைக் கவர்ந்த ரஜினியின் படங்களைப் பார்க்கலாம். இது தரவரிசை அல்ல.
முள்ளும் மலரும்
மகேந்திரன் என்கிற கிரியேட்டரிடம் ரஜினி தன்னை ஒப்படைத்தபடம். தமிழ் சினிமாவில் அதிக அண்ணன்- தங்கை படங்கள் வந்திருந்தாலும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட படமென்று இதனையே கருதுகிறேன். கோபப்படுகின்ற காட்சிகளிலும், தன்னுடைய இயலாமையை உணர்கின்ற காட்சிகளிலும் ரஜினி அற்புதமாக நடித்திருப்பார். படம் ஆரம்பத்திலிருந்து ரஜினியின் இயல்பான ஆனால், மற்றவர்களை மீறி ஈர்க்கின்ற நடிப்பினால் என்னைக் கவர்ந்த படம் இது. நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன் வெளியான படமென்றாலும் இலங்கை தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் ஆறு- ஏழு தடவைகள் பார்த்திருக்கிறேன்.
தில்லு முல்லு
ரஜினியின் பிதாமகர் கே.பாலசந்தர் எடுத்த படம். ரஜினிக்கு நகைச்சுவை- நக்கல் காட்சிகளில் சிறப்பாக நடிகக் முடியும் என்பதை சொன்ன முதல் படம். மீசையுடனும், மீசையின்றியும் படம் முழுவதிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் ரஜினி. அதுவும், தன்னுடைய முதலாளி தேங்காய் சீனிவாசனை அவரின் வீட்டில் சந்திக்கும் காட்சிகள் அதிரடியான நகைச்சுவை. அதுபோல, அந்தப் படத்தில் வரும் ‘ராகங்கள் பதினாறு’ என்ற பாடல் என்றும் என் மிகவிருப்பப் பாடல். ஒரே அறைக்குள் அற்புதமாக எடுக்கப்பட்டது. ரஜினியின் அசைவுகள் சூப்பராக இருக்கும். ரஜினியின் நகைச்சுவைப் படங்களுக்கு அடிகோலியது தில்லுமுல்லே.
பதினாறு வயதினிலே
எழுபதுகளிலிருந்து- தொண்ணூறுகள் வரை ஒவ்வொரு ஊரிலும் ஒரு ‘பரட்டையை’ பார்க்க முடியும். அதுவும், முறையற்ற வகையில் மற்றவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் செய்யும் சின்ன ரவுடி. பாரதிராஜா என்கிற நல்ல யதார்த்தமான(?) இயக்குனரை தமிழ் சினிமா உலகுக்கு காட்டிய படம் பதினாறு வயதினிலே. கமல்- சிறிதேவி முக்கிய பாத்திரங்கள் ஏற்றிருந்தாலும் அவர்களைத் தாண்டி ‘பரட்டை’ ரஜினி மக்களின் அபிமானம் பெற்றார். ‘பரட்டை’ என்கிற பாத்திரம் ரஜினியை மாஸ் கலாசாரத்துக்குள் மெல்ல மெல்ல நகர்த்தியதை பார்க்க முடியும். அதன் தொடர்ச்சியே எந்திரன் வரை நீள்கிறது.
இளமை ஊஞ்சலாடுகிறது
மறைந்த பல்சுவை இயக்குனர் சிறீதர் இயக்கிய படம். வில்லன் பாத்திரங்களைச் செய்து வந்த ரஜினி மெல்ல மெல்ல கதாநாயகத் தன்மை கொண்ட பாத்திரங்களுக்குள் நுழைந்த தருணத்தில் கமலுடன் இணைந்து நடித்த மற்றுமொரு படம் இளமை ஊஞ்சலாடுகிறது. தன்னுடைய நண்பன் (சகோதரன்) செய்த தவறுகளை தாங்கிக்கொள்ள முடியாமலும், அதனை எவ்வாறு கையாள்வது என்று புரியாமலும் தவிக்கும் பாத்திரத்தில் சடுதியான கோபம்- மனநெகிழ்ச்சி என்று அந்தப் பாத்திரத்துக்கு என்ன தேவையோ அதனை செய்திருப்பார் ரஜினி. படத்தின் இறுதிக் கணங்கள் என்னை அதிகம் ஆட்கொண்டவை.
அன்புள்ள ரஜினிகாந்த்
எம்.ஜி.ஆர். எவ்வாறு தான் ஏற்ற பாத்திரங்களினூடு தன்னுடைய பெயரை மக்களின் மனங்களில் நிலைநிறுத்தினாரோ. அதேபோல, ரஜினியின் போக்கும் அமைந்த படங்களில் அன்புள்ள ரஜினிகாந்த் முக்கியமானது. படம் முழுவதிலும் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த நபராக ரஜினி என்கிற நடிகராகவே நடித்திருப்பார். முத்து, எஜமான் படங்களில் ரஜினியின் ஜோடியாக நடித்திருந்த மீனா அன்புள்ள ரஜினிகாந்தில் அங்கிள் அங்கிள் என்று அழைத்தபடி சிறுமியாக நடித்திருப்பார். அதுவும், ரஜினியும், பாக்கியராஜ்ஜூம் இணைந்து வரும் காட்சிகளில் சிரிப்பின் உச்சம். மெல்லிய உணர்வுகளினூடு மக்களை ரஜினி வென்ற படங்களில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ முதன்மையானது.
தளபதி
ரஜினியின் நடிப்புக்கு இயக்குனர் மணிரத்தினம் தீனி போட்ட படம் தளபதி. மறுபுறத்தில் மம்முட்டி என்கிற யதார்த்த நடிகர் இருந்தாலும் தன்னுடைய நடை- பார்வை- வேகமான பேச்சினால் படம் முழுவதும் ஆக்கிரமிப்புச் செய்திருப்பார் ரஜினி. துரியோதனனும், கர்ணனுக்குமான நட்பின் அப்படையில் உருவான தளபதியில் கர்ணனின் பாத்திரத்தை எற்றிருப்பார் ரஜினி. எனக்கு, சில தருணங்களில் மகாபாரதத்தில் கர்ணன் நினைவுக்கு வந்தால், ரஜினியின் தோற்றமும் பாத்திரமுமே நிழலாக வருகிறது. அவ்வளவுக்கு அதில் ரஜினியை சரியாக கையாண்டிருப்பார் மணிரத்தினம். அதுவும், ஷோபனாவுக்கும், ரஜினிக்குமான காதல் காட்சிகளில் அதிரடியான ஆனால், நல்ல ரொமான்ஸ் இருக்கும். எனக்கு அதிகம் பிடித்த காதல் காட்சிகளில் தளபதி காதல் காட்சிகள் அடக்கம்.
அண்ணாமலை
ரஜினியின் மாஸ் அந்தஸ்தை உச்சத்துக்கு கொண்டு சென்ற படம். சுரேஸ்கிருஷ்னாவின் இயக்கத்தில் வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் அண்ணாமலை. வெகுளித்தனமான நடத்தை, குழந்தை தன்மையுள்ள காதல் என்று படத்தின் இடைவேளை வரை கலகலப்பூட்டும் ரஜினி, அடுத்த பகுதியில் துரோகத்தனத்தை வேரறுக்கும் நாயகனாக அதிரடியான காட்சிகளுடன் படம் அமர்க்களப்பட்டிருக்கும். ரஜினியை, எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு ஊடகங்களையும், தமிழக அரசியலையும் சிலகாலத்துக்கு நினைக்க வைத்ததில் அண்ணாமலையின் பங்கு அதிகமானது.
பாட்ஷா
பாட்ஷாவை நான் அதிக தடவை பார்த்த ரஜினியின் படமென்று சொல்ல முடியும். பாடல்கள், திரைக்கதை, வசனங்கள் என்று அனைத்துமே உச்சத்தில் இருக்கும். அதுவும், அப்பாவி ஆட்டோக்காரனாகவும், அதிரடியான தாதாவாகவும் அசத்தியிருப்பார் ரஜினி. “நான் ஒரு தடவை சொன்னால்… “ என்கிற வசனத்தை இன்றும் படம் பார்;கும் சிறுசுகள் சொல்லித்திரிவதை காணலாம். அதுபோல, பிளாஸ்பேக் காட்சியில் வரும் ரஜினி வயது அதிகமுள்ளவர் போல தோற்றமளித்தாலும், அதனை மறக்கவைத்து படத்தின் வேகத்தை அதிகரிக்க வைத்த பெருமை இயக்குனர் சுரேஸ் கிருஷ்ணாவைச் சேரும். அதுபோல, ரஜினி-ரகுவரனுக்கிடையிலான காட்சிகள் சொல்லத் தேவையில்லாவதை அற்புதம். (பாட்ஷா, அண்ணாமலை படங்களே ரஜினியின் மாஸ் அந்தஸ்தை உச்சத்துக்கு கொண்டு சென்றதில் முதன்மையான படங்கள்)
முத்து
கே.எஸ்.ரவிக்குமாரின் கலக்கல் திரைக்கதையுடன் வந்து வெளிநாடுகளில் கூட சக்கைபோடு போட்ட படம் முத்து. ஏ.ஆர்.ரஹ்மானும்- ரஜினியும் முதலில் இணைந்த படம். ஒருவன் ஒருவன் முதலாளி, குலுவாலிலே ஆகிய பாடல்கள் இன்றும் முணுமுணுக்கத் தக்கவை. தந்தை ரஜினியின் மீள்வருகைக் காட்சிகள் எனக்கு அதிகம் பிடித்தவை. இது, தமிழ் சினிமாவின் பல படங்களின் கலவையில் உருவான படம். ஆனாலும், ரசிக்கக் கூடிய வகையில் இருந்தது. ‘இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரும்….’ காட்சி நினைத்து நினைத்து சிரிக்கக் கூடியது.
எந்திரன்
எந்திரா…………! என்று கலாநிதிமாறனும், ரஜினியும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் (சன் தொலைக்காட்சியில்) நடைபோட்ட படம். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஏஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யாராய் பச்சன் என்று இந்தியாவின் நட்சத்திரங்களின் ஒத்துழைப்புடன் ரஜினி நடித்த அதிதொழில்நுட்ப படம். ஐம்பது நாட்கள் தாண்டி இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் அதிக வசூல் படம் என்றும் சொல்கிறார்கள். சுமார் 30 மாதங்கள் தயாரிப்பில் இருந்த படம். இப்படி என்ன வேண்டுமானாலும் செல்லலாம். ஆனாலும், எந்திரனில் எனக்கு அதிகம் பிடித்தது என்னவோ வில்லன் பாத்திரத்தில் வரும் ரஜினிதான். அந்த நடையும், பார்வையும், குரலும் முப்பது வருடங்களுக்கு முன்னர் ரஜினி எப்படி இருப்பாரோ அதையோ நினைவூட்டியது.
ரஜினியின் பிடித்த பத்து படங்கள் தொடர்பான இந்த தொடர்பதிவை யார் வேண்டுமானாலும் தொடருங்கள் உறவுகளே………!
ரஜினி! தமிழக சினிமாவின் வர்த்தகம்!! இந்தியச் சினிமாவின் மாஸ்!!!
‘சக்தே இந்தியா’: குசும்பரும், வந்தியும்.
Posted On Saturday, December 11, 2010 at at 12:38 PM by மருதமூரான்.வணக்கம் நண்பர்களே, சில பல வேலைப்பழுவின் காரணமாக சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன். ஒரு இனிய திரைப்படத்தின் பாதிப்புடன். மகிழ்சியளிக்கின்றது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் பதிவொன்றுடன் வருகின்றேன். அதுகூட 2007 ஒக்டோபர் 10ஆம் திகதி எழுதி பிரசுரமாகியதன் மீள்பதிவு, இதுக்கு ஏன் வணக்கமெல்லாம் சொல்லி???? காரணம் இருக்கிறது. இலங்கைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நானும் பதிவர் என்பதை இத்தால் அறியத்தருகிறேன். நானும் பதிவர் தான்! நானும் பதிவர் தான்!! இனி என்னுடைய முதல் சினிமா விமர்சனத்தையும், அதற்கு கிடைத்த பின்னூட்டங்களையும் படியுங்கள்.
இந்திய சினிமாவின் மசாலத்தனங்களை தாண்டி பிளக், காதல், வோட்டர் போன்ற சில யதார்த்த (அல்லது ஓரளவு யதார்த்த) திரைப்படங்களும் வெளிவருகின்றன என்பது உண்மைதான். கடந்த வார இறுதிநாளில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சக்தே இந்தியா’ திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நிச்சயமாக சொல்லுவேன் அதுவொரு இனிய அனுபவம்.
இந்தியாவில் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய இடத்திலிருக்கின்ற நடிகர் ஷாருக்கானால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடிந்தமை மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. இந்திய சினிமாவுக்கே உரித்தான ஆறு பாடல்கள், ஐந்து சண்டைக் காட்சிகள், அழகிய கதாநாயகி, நகைச்சுவை பாத்திரம் என்பனவெல்லம் இல்லாதவொரு திரைப்படத்தில் அவரால் நடிக்கமுடிந்துள்ளமை பாராட்டப்பட வேண்டியது.
இந்தியாவில் அனைவரும் கிரிக்கெட்டை கட்டி அழுதுகொண்டுள்ள நிலையில், தேசிய விளையாட்டான ஹொக்கியை மையமாக வைத்துக்கொண்டு திரைப்படத்தை நகர்த்தியுள்ள விதம், மற்றும் இந்திய ஹொக்கி அணியின் தலைவராக இருந்து ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அணியிலிருந்து வெளியேற்றப்படும் ஷாருகானின் கதாபாத்திரம் ஆகியன திரைப்படத்தின் அசத்தலான ஆரம்பம்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட பெண்கள் ஹொக்கி அணியினருக்கு பயிற்சியாளராக பணியாற்றுகின்ற ஷாருக்கான், அந்த வேளைகளில் எதிர்நோக்குகின்ற இடையூறுகள் மற்றும் ஒற்றுமையின்மை ஆகியவற்றை சமாளித்து அணியினை சிறப்பாக வழி நடத்துகின்ற விதத்தினை சிறப்பாக திரைக்கதை ஆக்கியுள்ளனர்.
குறித்த அணியிலுள்ள ஒவ்வொரு பெண்களிடம் உள்ள குறை நிறைகளை புரிந்துகொண்டு கண்டிப்பான பயிற்சியாளராக ஷாருக்கான் மிரள வைத்திருக்கின்றார். அவரது காதல் கலந்த நடிப்பை மட்டும் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது.
இந்தியாவின் தேசிய விளையாட்டு அந்த நாட்டு மக்களாலும், ஊடகங்களாலும், அரசினாலும் எவ்வாறு உதாசினப்படுத்தப்படுகின்றது என்பதற்கு வைக்கபட்டுள்ள காட்சிகள் அனைத்தும் மிகவும் யதார்த்தமாக இருகின்றது. அணித் தலைவர் தெரிவின் போது எழுகின்ற பிரச்சினையும், அந்த பிரச்சினை உலகக்கிண்ண போட்டிகளின் போது பயிற்சியாளரிடம் வெளிப்படுத்தப்படுகின்ற விதம், அதற்கு பயிற்சியாளர் பதிலளிக்கின்ற விதம் ஆகியன மிகவும் இயல்பாகவுள்ளது. இரசிக்கலாம்.
உலகக்கிண்ண போட்டிகளின் போது அணியினனை சிறப்பாக வழிநடத்தி சென்று வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியுடன் செயற்படுகின்ற பயிற்சியாளராகவும், தனக்கு ஏற்பட்ட களங்கத்தினை துடைக்க வேண்டும் என்பதில் இருக்கின்ற வெறியிலும் ஷாருக்கான் மிகவும் கனகச்சிதமாக பெருந்தியிருக்கின்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இனிய திரைப்படத்தினை பார்த்த சந்தர்ப்பம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.
‘சக்தே இந்தியா’ திரைப்படத்தினை பார்த்த பின்னர் ஏதோவோரு ஆங்கிலப்படத்தினை அரைகுறையாக பார்த்த ஞாபகம் வந்தது. பெயர் நினைவுக்கு வரவில்லை. குறித்த திரைப்படத்தில் கால்பந்தாட்டம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. அதில் இறுதிப்போட்டியில் குறித்த அணி வெற்றி பெறவில்லை காரணம் அது ஆங்கிலப்படம். ‘சக்தே இந்தியா’வில் ஹொக்கி அணி வெற்றி பெற்றது, காரணம் சொல்லவேண்டியதில்லை இந்திய சினிமாவில்.
குறிப்பு: இந்திய மசாலாப்படங்களை பார்த்து பழகியவர்களுக்கு சிறிய நெருடல் வரலாம் குறித்த திரைப்படத்தை பார்க்கும் போது. எனினும் நான் உத்தரவாதமளிக்கின்றேன் ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள். சிறப்பாக இருக்கும்.
பின்னூட்டங்கள்:
குசும்பன்: நன்றாக இருக்கிறது உங்கள் விமர்சனம்!! ஆனால், ஹிந்தி புரியாமல் என்னால் பார்க்க முடியாதே!!!
வந்தியத்தேவன்: இந்தப் படம் ஆங்கில உப தலைப்புகளுடன் லிபேர்ட்டி திரையரங்கில் ஓடியது. மிகவும் சிறந்த படம். இப்படியான கதை அம்சம் உள்ள படங்களில் தமிழக் ஹீரோக்கள் நடிக்கமாட்டார்கள் அவர்களுக்கு சதை அம்சமுள்ள கதைகள் தான் தேவை.
மருதமூரான்: குசும்பர், தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் ஆங்கில உபதலைப்புக்களுடன் ‘சக்தே இந்தியா”திரைப்படைத்தை கொழும்பிலே பார்த்தேன். மொழி தேவையில்லை பார்க்கலாம்.
மருதமூரான்: நண்பர் வந்தியத்தேவன். தங்களின் வருகைக்கு நன்றி, நானும் அங்குதான் பார்த்தேன். டி.வி.டி ஒன்றும் வாங்கி வைத்துள்ளேன்.
வந்தியத்தேவன்: எங்கே டிவிடி வாங்கினீர்கள்? நான் பெற்ராவில் தேடிய இடங்களில் ஆங்கில உப தலைப்பில்லாத சீடிக்கள் தான் இருந்தன. மீண்டும் ஒரு முறை ரிலாக்ஸ்சாக பார்க்கவேண்டும்.
அடடா…! ஒரு பதிவு போடுவது எவ்வளவு சிரமமான விடயம். எவ்வளவு சிந்திக்க வேண்டியிருக்கிறது:-)