யாழ்தேவி.கொம், ‘ஈ- சுவாபிமானி 2010’ விருது வென்றது.


தமிழ் மொழி இணையத்தளங்கள், வலைப்பூக்கள் மற்றும் வலைமனைகளை இணைக்கும் தளமாக செயற்பட்டு வரும் யாழ்தேவி.கொம் (www.yaaldevi.com) ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும், இலங்கைத் தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் (Information and Communication Technology Agency of Sri Lanka) வழங்கிய ‘ஈ- சுவாபிமானி 2010’ விருது விழாவில் ‘ஈ- செய்திகள்’ பிரிவில் விருது வென்றது.

கொழும்பு சினமன் கிராண்ட் விடுதியில் நவம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற ‘ஈ- சுவாபிமானி 2010’ விருது வழங்கும் விழாவில் இலங்கைத் தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் பி.டபிள்யூ.எபாசிங்கவிடமிருந்து யாழ்தேவி மற்றும் தனியார் நிறுவனத்தின் சார்பில் நிறுவனத்தின் அபிவிருத்தி பணிப்பாளர் புருஜோத்தமன் தங்கமயில் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கு- தெற்கு மக்களையும், அவர்களின் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் யாழ்தேவி இணையத்தின் சேவையை, ‘ஈ- சுவாபிமானி 2010’ விருதுகள் தேர்வுக்குழுவினரும் பாராட்டி கருத்து வெளியிட்டிருந்தனர்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஐரோப்பியா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளிலிருந்தும் செயற்படுத்தப்படும் 500க்கும் அதிகமான வலைப்பூக்கள் மற்றும் வலைமனைகளை யாழ்தேவி ஒருங்கிணைத்து வருகின்றது. அத்துடன், இணையத்தளங்களில் எழுதி வரும் எழுத்தாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களை அச்சு ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்தேவி.கொம் பெற்றுக்கொண்ட ‘ஈ- சுவாபிமானி 2010’ விருதினை எம்முடைய வாசகர்கள், இணைய இணைப்பாளர்கள், வலைப்பதிவாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அத்துடன், எம்மை தொடர்ந்தும் ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் நன்றிகள்.

‘ஈ- சுவாபிமானி 2010’ விருது வென்றவர்களின் பட்டியல்:

http://www.eswabhimani.lk/index.php?option=com_content&view=article&id=51&Itemid=32



யாழ்தேவியும் நண்பர்களும்.