இவனுக்கு கடலும், வானமும் எல்லையில்லை! இவனே எல்லை!!
‘மருதமூரான்’ என்கிற நான் புருஜோத்தமன் தங்கமயில். யாழ்ப்பாணத்தின் மருதங்கேணியை பிறப்பிடமாகவும், சிறிது காலம் வசிப்பிடமாகவும் கொண்டவன். கால ஓட்டத்தில் நானும் இடப்பெயர்வுகளுக்கும், அகதி வாழ்க்கைக்கும் உட்பட்டு அலைந்திருக்கிறேன். வேலை மற்றும் கல்வியின் நிமிர்த்தம் கொழும்பில் தற்போது தரித்திருக்கிறேன். இந்த பயணம் எதிர்காலத்திலும் தொடரலாம்.
இலத்திரணியல் ஊடக கல்வியை நிறைவு செய்த நான், அடிப்படையில் ஒரு ஊடகவியலாளன். அரசியல், சமூகம், சினிமா, எழுத்துக்கள் மற்றும் விளையாட்டு என்று அனைத்தையும் விரும்புகிறேன். இந்த தளம் என்னுடைய அனுபவங்கள் மற்றும் விருப்பங்களை எழுதுவதற்காகவும், பகிர்ந்து கொள்வதற்காகவுமே.